மாளிகைகாடு முஸ்லிம் பிரதேசத்தில் சரத் வீரசேகரவினால் அபிவிருத்தி திட்டங்கள்
(யு.எம்.இஸ்ஹாக்)
அம்பாறை மாவட்ட மாளிகைகாடு முஸ்லிம் பிரதேசத்தில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் மற்றும் தொழில் விருத்தி அமைச்சருமான ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவினால் பல அபிவிருத்தி திட்டங்கள் 07.11.2013 மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் சரத் வீரசேகர பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான ஏ.எம் .ஜாஹிர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வுகளில் பிரதி அமைச்சரின் காரியாலயம் திறந்து வைக்கப் பட்டதுடன் மாளிகைகாடு உப தபாலக வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நடுதல் மாளிகை காடு அல் -ஹுசைன் வித்தியாலய நுழை வாயில் புனரமைபிற்கான நடுதல் ,மாளிகை காடு அல் -ஹுசைன் வித்தியாலயதில் நிர்மாணிக்கப் பட்ட சுவரோவிய சுற்று மதில் திறந்து வைத்தல் என்பன இடம் பெற்றது.
Post a Comment