அக்கரைப்பற்று மேயர் சக்கி அதாஉல்லாவின் திடீர் விஜயம்
அக்கரைப்பற்று மாநகர மேயர் அகமட் சக்கி அதாஉல்லா இன்று (2013.11.07) அக்கரைப்பற்றுக் கோட்டத்திலுள்ள அக்கரைப்பற்று நகரில் இவ்வாண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையான அஸ் சிறாஜ் ஜூனியர் வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அவ்வேளை அப்பாடசாலையில் கோட்டமட்டத்திலான வெளிவாரி மதிப்பீட்டுக்கான மேற்பார்வை நடைபெற்றுக் கொண்டிருந்தது. மாநகர மேயரை வரவேற்ற பாடசாலையின் அதிபர் எஸ். றினோஸ்தீன் பாடசாலையின் வகுப்பறைகளையும், கற்றல் நிலைமைகளையும் காண்பித்தார். மேயர் அவர்கள் மேற்பார்வை நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், புதிய கட்டிடத்திற்கான வேலைத் திட்டங்களின் முன்னேற்றத்தையும் பாடசாலையின் அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார். இச்சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று வலயயத்தின் கணக்காளர் றிஸ்வி யஹ்ஸர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் அகமட் கியாஸ் ஆகியோரும் அவ்வேளை பாடசாலைக்கு வருகைதந்திருந்தனர். வகுப்பறைகளில் ஆசிரியர், மாணவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை மாநகர மேயர் உட்பட ஏனைய அதிகாரிகளும் இணைந்து பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.
Post a Comment