Header Ads



கசினோ சட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள் - முஸ்லிம் எம்.பி.க்களிடம் வேண்டுகோள்


கசினோ - சூதாட்டச் சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டாமென சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன், ஒவ்வொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்களை அனுப்பிவைத்துள்ளார்.

கசினோ சூதாட்டச் சட்டத்தை கைவிடும்படி முஸ்லிம் கவுன்சில் ஏற்கனவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது. கசினோ சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாமெனவும், அதனை எதிர்ப்பதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் வெளியிடப்பட்ட முதாவது அறிக்கை அதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முஸ்லிம் கவுன்சில் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் பல்வேறு விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அதேவேளை இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கசினோ சட்டமூலம் வெற்றிபெறுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே காரணமாக அமைந்ததாக ஜாதிக்க ஹெல உறுமய தன்னிடம் சுட்டிக்காட்டியதாகவும், இஸ்லாம் சூதாட்டத்தை எதிர்க்கும் நிலையில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சூதாட்ட சட்டத்திற்கு அன்றே எதிர்த்து வாக்களித்திருப்பின் இந்நிலை இன்று ஏற்பட்டிருக்காதென ஜாதிக்க ஹெல உறுமய மேலும் குறிப்பிட்டதாகவும் என்.எம். ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் சுட்டிக்காட்டினார்.

2 comments:

  1. Please tell those names who supported if your news is true.

    ReplyDelete
  2. Mr.Ameen அவர்களே! உங்கள் வேண்டுகோள் முஸ்லிமல்லாதவர்களுக்கு என்று இருந்தால் நான் குறிப்பு எழுத வேண்டி இருந்திருக்காது, உங்களுக்கு ஒரு வேண்டுகோள் முஸ்லிம் பெயரில் இருக்கும் பாராள மன்ற உறுப்பினர் என்று எழுதுங்கள் அத்துடன் இஸ்லாத்தை இது வரை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் அல்லாஹ்வின் சட்டத்துக்கு எதிரான இந்த சட்டத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுப்பாருங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.