கல்முனை சாஹிரா கல்லூரியில் சுமுகநிலை - கற்றல், கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பம்
கல்முனை சாஹிராவில் சுமுகநிலை ஏற்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் வருகை குறைவாக இருந்த போதிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது .
கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக மாணவர்கள் கடந்த மூன்று தினங்களாக இரண்டு ஆசிரியர்களை இடமாற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருந்தனர் .
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட தொடர்பு பட்ட உதவி அதிபர் சிகிச்சை பெற்றுவருகின்றார் பணிப்பாளர் வீடு சென்றுள்ளார் .இவர்கள் இருவரும் எதிர் வரும் 06ஆன் திகதி நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.
இதேவேளை சர்ச்சைக்குரிய ஆசிரியர்கள் இருவரும் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்பமிடுவதர்க்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் அனுமதித்துள்ளது.. அதேநேரம் குறித்த சர்ச்சைக்குரிய ஆசிரியர் ஒருவருக்கு எதிராக கல்லூரி ஆசிரியைகள் இன்று கையெழுத்து வேட்டை ஒன்றையும் நடாத்தி உள்ளனர் . அங்கு கற்பிக்கும் ஆசிரியைகளை குறித்த ஆசிரியர் புனைப் பெயர் சொல்லி மாணவர்களின் முன்பாக இம்சைப் படுத்துவதை கண்டித்தே இந்த கையெழுத்து வேட்டை இடம் பெற்றதாக ஆசிரியை ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்துக்கு தெரிவித்தார்.
இன்றைய பாட சாலை நிலையை கவனிக்க கல்முனை வளைய கல்வி அதிகாரி ஒருவர் பாடசாலைக்கு வந்து நிலைமையை அவதானித்து சென்றார்.
Post a Comment