Header Ads



அல் அக்ஸா பள்ளிவாசல் இமாம் குற்றவாளியென, இஸ்ரேல் நீதிமன்றம் தீர்ப்பு


இஸ்ரேலுக்குள் இயங்கும் இஸ்லாமிய முன்னணியின் தலைவர் ஷெய்க் ரயீத் சலாஹ் வன்முறையை தூண்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றவாளி என இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

இனவாதத்தை தூண்டுவதாக ஜெரூசலம் நீதவான் நீதிமன்றம் சலாஹ் மீது நேற்று குற்றம் சுமத்தியது. சலாஹ் கடந்த 2007 ஆம் ஆண்டு செய்த பிரசங்கம் ஒன்றில் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க தனது உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக கூறியது தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 

ஜெரூசலத்திற்குள் நுழைய அவருக்கு இஸ்ரேல் பொலிஸ் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து ஜெரூசலத்தின் வதி ஜோஸ் பகுதியில் வைத்து சலாஹ் மேற்படி பிரசங்கத்தை செய்தார். எனினும் இந்த பிரசங்கம் யூதர்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. இந்நிலையில் சலாஹ் மீதான தண்டனை குறித்து நீதிமன்றம் பிந்தைய திகதியில் தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.