பூவரசங்குளம் பொன்தீவில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த இடத்திற்கான ஆதாரங்கள் முஸ்லிம்களிடம் இருப்பதாகவும்,பூவரசங்குளம் காணியில் வெளிமாவட்டத்தினர் மீள்குடியேற்றப்படுவதாக தெரிவிக்கும் கருத்து வண்மையான கண்டனத்துக்குரியதாகும் என வடமாகாண சபையின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
பூவரசங்குளம் கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பொன்தீவு கண்டல் காணி தொடர்பிலும்,அதில் இந்திய அரசாங்கம் வழங்கிய வீடுகளை மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் அமைக்கும் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கையில் அதற்கு எதிரான செயற்பாடுகளால் அத்திட்டம் இடை நிறுத்தப்பட்டது தொடர்பில் அரசியல் பிரதி நிதிகள் மற்றும் கிராம மக்கள் அறிவூட்டப்பட வேண்டும் என பிரதேச செயலாளரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது தொடர்பில் இன்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சந்திர அய்யா தலைமையில் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
கூட்ட ஆரம்பத்தில் இக் கூட்டத்தின் கேநாக்கம் தொடர்பி் பிரதேச செயலாளர் தெளிவான விளக்கமொன்றை அளித்தார். இந்த காணி தொடர்பாக கடந்த 2009-2010 ஆம் ஆண்டுகளில் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் அதற்கு மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரம்,அதனையடுத்து இரு கிராம மக்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவுகள் எட்டப்பட்டு காணிகள் பகிர்ந்தளிப்பு செய்யப்பட்டு வீட்டு நிர்மாணப்பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருந்த போது சில தடங்கள்கள் ஏற்பட்டதையடுத்து இத்திட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்ததாகவும்,இன்று இது குறித்த விளக்கத்தை இங்கு அழைக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.
பின்னார் இக் கூட்டத்தில் இரு தரப்பினரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர். இருந்த போதும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிலர் காணியின் பூர்வீகம் தொடர்பில் எழுப்பிய கேள்வியினால் இக் கூட்டத்தில் இது குறித்து கவனம் திசை திருப்பப்பட்டது.
அப்போது அக்கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம் தரப்பு பிரதி நிதிகள் தற்போது பேசப்படும் இக்காணியானது பூவரசன்குளம் கிராமத்திற்குட்பட்டிருப்பதால் முஸ்லிம்களுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ள இக்காணி தொடர்பில் பேசு்வது தொடர்பில் அர்த்தமில்லை என்பதாலும்,தமிழர்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் கூடுவதாகவும்,அதற்கு முன்னர் இரு கிராமங்களுக்கும் பிரதி நிதிகள் சென்று மக்களுடன் சுமூகமான பேச்சுக்களை நடத்துவதுடன்,ஆவணங்கள் தொடர்பில் விபரங்களை சேகரிப்பது என்ற கருத்து இங்கு முன் வைக்கப்பட்டது. அதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் தரப்பு பிரதி நிதிகள் இதற்கான உடன்பாட்டினை வெளியிட்டனர்.
Post a Comment