Header Ads



சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் உள்ளக வீதி அபிவிருத்தி


(ஏ.பி.எம்.அஸ்ஹர் யு.எம்.இஸ்ஹாக்)

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முயற்சியினால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வியின் வழிகாட்டலில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் உள்ளக வீதி அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த மழை காலங்களில் வைத்தியசாலையின் உள்ளக வீதிகளில் நீர் தேங்கி நிற்பதனால் வீதிகள் சேறும் சகதியுமாக காணப்படுகின்றன இதனால் இவ்வீதியால் வைத்தியர்கள், தாதிய மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் விடுதிக்குச் செல்வதிலும், கடமைக்குச் செல்வதிலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்

இந்நிலைமையினை வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் கவனத்திற்கு கொண்டு வந்ததெற்கினங்க மேற்படி வீதி அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இச்சேவையினை செய்ய முன்வந்தமைக்காக  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி மற்றும் சாய்ந்தமருது தேசிய காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,  வைத்தியர்கள், தாதிய மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் சாய்ந்தமருது பொதுமக்கள் தங்களது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.


1 comment:

  1. நோயாளியே இல்லாத வைத்தியசாலைக்கு எதுக்ககப்பா ரோடு, போர்டு, அபிவிருத்தி சங்கம் எல்லாம். இந்த ஆஸ்பத்திரிக்கு வந்தா நோயாளிகளுக்கிட்ட டாக்டரே சொல்றறாராம் இங்கு வைத்தியம் நல்லமில்லை கல்முனைக்கு போங்க எண்டு. அப்ப எப்பிடி நோயாளி போவங்க. மொதல்ல வைத்தியம் ஒழுங்கா செய்ங்க. அப்புறம் மத்த விசயங்கள பாக்கலாம். புரியுரவங்களுக்கு புரிஞ்சா சரி.

    ReplyDelete

Powered by Blogger.