விளையாட்டை நேசிக்கும் ஒருவர் நமது நாட்டுத் தலைவராக உள்ளது பெரும் பாக்கியம்
விளையாட்டை நேசிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக வந்த காரணத்தால் என்று மில்லாத அளவில் இன்று கிராமங்கள்தோரும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி அடைந்து வருகிறது என விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத் கமகே தெரிவித்தார்.
(1.11.2013) கண்டி பெண்கள் உயர் கல்லூரியில் 320 இலட்ச ரூபாவில் அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் உடற் பயிற்சிக் கூடம் என்பவற்றை திறந்து வைத்த பின் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஒருவர் எவ்வளவு புத்தி சாதுர்யமான வராக இருந்தாலும் உடல் நலம் இன்றி இருப்பராயின் அது பயனற்றது. ஒருவர் சுகதேகியாக வாழ உடற்பயிற்சி மிக முக்கியமாகும். அந்த வகையில் விளையாட்டு உடற் பயிற்சி ஆகிய விடயங்களில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. விளையாட்டை நேசிக்கும் ஒருவர் நமது நாட்டுத் தலைவராக வந்துள்ளமை எமக்குக் கிடைத்த பாக்கிய மாகும்.
அடுத்த வருடம் முதல் சகல மாணவர்களும் கட்டாயம் ஒரு விளையாட்டில் ஆடுபட வேண்டுமென் சுற்று நிருபம் தயாரிக்க உள்ளோம். கண்டி போன்ற பிரதேசங்களில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இருந்த போதும் அவர்களால் கொழும்பைச் சூழவுள்ள வீரர்களை வெற்றி ஆட்டுவதில் காணப்பட்ட தடை என்ன வென ஆராய்த போது பரவலான முறையில் சகலருக்கும் விளையாட்டு அடிப்படை வசதிகள் இல்லை என்பது தெரிய வந்தது என்றார்.
Post a Comment