திருமணம் செய்த மனைவியை வாடகைக்கு விடும் கணவர்மார்
(வைகை அனிஷ்)
இந்தியா - தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வறுமையின் காரணமாக குடும்பங்கள் சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை குத்தகைக்கும்,
வடமாநிலங்களில் முறுக்கு கம்பெனிகளுக்கு வேலை செய்வதற்கும் விடும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. அது மட்டுமன்றி பெற்ற பிள்ளையை அடைமானம் வைக்கும் நிலையும் உள்ளது.
தற்பொழுது, கட்டிய மனைவியை வாடகைக்கு விடும் கணவன்கள் ஏராளமாக உள்ளனர். மும்பை, திருப்பூர், பாண்டிச்சேரி பகுதிகளில் இந்த அசிங்கங்கள் அரங்கேறி அவ்வப்போது ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வந்தன. இப்போது தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் வறுமையின் காரணமாக தன்னுடைய மனைவியை கணவன்மார்களே வாடகைக்கு விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப உறவுகள் சிதைவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவருகிறது.
மதுரை முத்துப்பட்டி கண்காய்கரை பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் நாகலிங்கம். நாகலிங்கத்திற்குக் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் சத்தியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர்.
நாகலிங்கத்தின் நண்பர் ஜாகிர் உசேன். இவர் அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்னர் சத்தியாவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமக்கு வாடகைக்குத் தருமாறு கேட்டுள்ளார். நாகலிங்கமும் 1.5 லட்சம் வாங்கி கொண்டு கட்டிய மனைவி சத்தியாவை ஜாகிர்உசேனுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
ஒப்பந்தம் முடிந்தவுடன் மனைவியை அழைக்கச்சென்றுள்ளார். ஆனால் சத்தியா அவருடன் வர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வாடகை மனைவியை விட்டுக்கொடுக்க ஜாகிர் உசேனுக்கு மனமில்லாததால் ஜாகிர் உசேனும் அவரது தம்பி முகைதீனும் காரில் சென்று நாகலிங்கத்தைக் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெய்ஹிந்த் புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
வெளியூரில் இருந்து வியாபாரத்திற்காக வருபவர்கள், இங்கு ஒரு மாதத்திற்கு மேல் தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இது போன்று வாடகைக்குக் குடும்ப பெண்களை "அழைத்து" கொள்ளும் நிலை உள்ளது. வறுமையின் காரணமாக கணவன்களே இதற்கு உடந்தையாகவும் இருக்கின்றனர்.
காவல்துறையினர் தனிப்படை அமைத்து இத்தகைய சமூக விரோத கும்பல் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டில் கலாச்சாரம் சிதைந்து விடும் என்பதுடன், பெண்கள் போகப்பொருளாகவும், போதைப்பொருளாகவும் மாற்றப்படும் அபாயமுள்ளது!
ஷீயாக்களின் கேடு கெட்ட ஒரு சட்ட முறை தான் இந்த வாடகைத்தனம் இதாக்கும் இஸ்லாத்திக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஷீயாக்கள் இஸ்லாமியரும் அல்ல அவர்கள் வழி கேடர்கள் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் அவர்கள் முஸ்லிம்களின் பெயரில் நடமாடும் யஹூதிகளின் செல்லப்பிள்ளைகள்.
ReplyDelete