Header Ads



கட்டிப்பிடித்து அழுத ஹக்கீமும், சிறாஸும்

கல்முனை மேயராக இதுகாலவரையும் பதவிவகித்துவந்த சிறாஸ் மீராசாஹிப் தனது ராஜினாமா கடிதத்தை கையளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை 08-11-2013 அன்று ரவூப் ஹக்கீமின் வீட்டிற்கு சென்றவேளையில் இருவரும் உணர்ச்சி பொங்கியவர்களாக ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அழுதுள்ளனர்.

இதனை சிறாஸ் மீறாசாஹிப் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தொலைபேசி மூலமாக குறிப்பிட்டார்.

அதேவேளைமுஸ்லிம் காங்கிரஸிலிருந்து தன்னை வெளியேற்றுவதற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் சிலர் சதி செய்வதாக கூறிய சிறாஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமிருந்து தமக்கு பல வாக்குறுதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் நேரடி பிரதிநிதியாக ரவூப் ஹக்கீம் தம்மை நியமிக்கவுள்ளதாகவும், தொடர்ந்தும் மக்களுக்கான தனது சேவைகள் தொடருமெனவும் அவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.

6 comments:

  1. மிகவும் நல்ல முடிவை எடுத்துள்ளீர்கள் சிராஷ் அவர்களே அனால் தயவு செய்து பிரதேச வாதத்தை கொண்டு உங்களது அரசியல் பயணத்தை தொடராதீர்கள் அது சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல.

    ReplyDelete
  2. அடடா, இவர்கள் இருவரும் பெரிய நடிகர் திலமும், நடிகவேளும், இவர்களுக்கு பிலிம்பெயார் விருதுதான் கொடுக்க வேனும்.

    ReplyDelete
  3. Mr.shiras you know well without SLMC u cant win any election form Ampara District (indicate Sainthamarutu,Kalmunai,Maruthamunai ,ninthauvr,Pothuvil&samathurai)

    ReplyDelete
  4. அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பானாக சாய்ந்தமருது பள்ளி நருவாகசபையோர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவட்டு பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு நிருவாக சபையை கலைத்து வேறு ஒரு சபையை நியமிக்க உரிய நடவடிக்கை எடுங்கள் .

    ReplyDelete
  5. Mustafa Jawfer, மிக முக்கியமான விடயத்தை பதிவு செய்ததற்கு எனது பணிவான நன்றிகள். சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபை இதை நிறைவேற்றுவார்களா..???

    ReplyDelete
  6. மாஷா அல்லாஹ், சகோதரர் சிராஸ் அவர்களே! இந்த முடிவை எப்பவோ எடுத்திருக்கலாம், இருந்தாலும் பரவாயில்லை, இப்போது நீங்கள் எடுத்த முடிவு முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதாக இருப்பது ஒரு வகையில் தலைவருக்கும் கட்சிக்கும் ஒரு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இனிமேலாவது அரசியல் விஊகத்தை தான் சார்ந்திருக்கும் கட்சியுடன் இணைந்து சாய்யுங்கள்.
    அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத்தை நஸீபாக்குவானாக!!! ஆமீன்..

    ReplyDelete

Powered by Blogger.