பெண்ணுக்கு முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்த பௌத்த தேரரை பதவியிருந்து நீக்க நீதிமன்றம் உத்தரவு
கலாநிதி தொடங்கொட ரேவத்த தேரரை இந்திய மகாபோதி பௌத்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்குமாறு இந்தியாவின் கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் அவர் அந்த பதவியில் தொடர்வதற்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பௌத்த பிக்குகளுக்கு போதிக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிகளை மீறி பௌத்த பிக்கு ஒருவர் செயற்பட கூடாத வகையில் செயற்பட்டார் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த இந்த பௌத்த பிக்கு பெண்ணொருவருக்கு முத்தமிடும் காணொளி மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன. இதனால் இந்திய பௌத்த மக்கள் மத்தியில் இவர் சர்ச்சைக்குரியவராக இருந்தார். இவருக்கு எதிராக இந்தியாவில் உள்ள பல பௌத்த அமைப்புகள் மற்றும் பிக்குகள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இது மட்டுமல்லாமல் இந்திய மகாபோதி சங்கத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் பற்றிய ததகவல்களை இந்திய ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. வெளிநாட்டு பணத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்ற்ச்சாட்டில் ரேவத்த தேரர், சங்கத்தின் நிதி விடயங்களில் தலையிட இந்திய உள்துறை அமைச்சு தடைவிதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment