கல்முனை ஸாஹிறாவில் நடந்தது நிதி மோசடி அல்ல
ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தில் வெளியான கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் நிதி மோசடியா..? என்ற செய்திக்கு -நடந்தது நிதி மோசடி அல்ல விளக்கமளிக்கின்றார்கள் :- கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் முகாமைத்துவ குழு உறுப்பினர்கள்
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில்; அண்மையில் நடைபெற்ற முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் பாடசாலையிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் உடனடியாக இணங்காணப்பட்ட வகுப்பறைக்கான புதிய கதிரை மேசை கொள்வனவு செய்தல், வகுப்பறைத் தரைக்கு சிமெந்து பூசுதல், மை பூசுதல், பைப் லைன் பொருத்துதல், தரம் 06,07,08 வகுப்பறைத் திருத்தவேலை செய்தல், வகுப்பறை மின் இணைப்பைத் திருத்துதல், பாடசாலைச் சுற்றாடலை அழகுபடுத்தல் போன்ற வேலைகளை செய்வதற்காக சில ஆசிரியர்களை பொறுப்பாக்கி அந்த ஆசிரியர்கள் தங்களது வேலைகளை சம்மந்தப்பட்ட ஊழியர்களை வரவழைத்து வேலைகளை சிறப்பாவும் துரிதமாகவும் செய்து முடித்தனர்.
பாடசாலையில் நடைபெற்று முடிந்த வேலைகள் சம்பந்தமாக கல்முனை வலயக் கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் முக்தார் என்பவர் ஜிப்ரி பிரதான வீதி, கல்முனைக்குடி என்ற அனாமோதைய முகவரியிட்டு கடிதம் ஒன்றை கல்முனை கல்வி வலயக் கணக்காய்வாளருக்கு முறைப்பாடு ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 2013.10.10 ம் திகதி மாகாணக் கல்வி திணைக்கள பிரதம கணக்காய்வாளர், கல்முனை கல்வி வலயக் கணக்காய்வாளர் மற்றும் நிருவாக உத்தியோகத்தர்கள் கல்லூரிக்கு சமூகமளித்து வேலைக்காக பாடசாலை முகாமைத்துவக் குழுவினரால் பொறுப்பாக்கப்பட்ட ஆசிரியர்களை அழைத்து அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிதிமோசடி சம்பந்தமான குற்றாச்சாட்டினை விசாரணை செய்த போது இவர்களால் செய்து முடிக்கப்பட்ட வேலைகளுக்குமான தெளிவான ஆதாரங்கள் அனைத்தும் பொறப்பட்டு பரிசீலனை (Bill, Voucher பரிமாறப்பட்ட Letter’s செய்யப்பட்டு பின்னர் இதில் எந்த விதமான நிதி மோசடியும் இடம் பெறவில்லை எனவும் ஒதுக்கப்பட்ட நிதியைவிட பெற்றோர்களின் பங்களிப்புடன் அதிகமான வேலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதற்குப் பிறகு பாடசாலை ஆசிரியர்களின் பெயர்களில் காசோலை வழங்குவதனை கூடியளவு தவிர்த்துக் கொள்ளுமாறு ஆலோசனைகளையும் வழிகாட்டுதழ்களையும் வழங்கிச் சென்றனர்.
( குறிப்பு :- 30.10.2013 ஆம் திகதி எமது கல்லூரி கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரியர் குழுக் கூட்டத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நிதி மோசடி சம்பந்தமாக விளக்கமளிக்கும் போது இப்பாடசாலையில் எனது அறிவுக்கெட்டிய வகையில் எவ்வித நிதி மோசடியும் இடம்பெறவில்லை என கூறியதோடு பாடசாலையில் ஏதாவது வேலைகள் வெளி நபர்கள்இ வியாபார நிருவனங்கள் மூலம் செய்து முடித்திருப்பின் அதற்காக பொறுப்பாக்கப்பட்ட ஆசிரியர் பெயரில் காசோலை வரைய முடியும் என்றும் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.)
பிரதிக் கல்விப் பணிப்பாளரின் செயற்பாடுகள் பாடசாலையினை முன்னேற்றிச் செல்லும் செயற்பாடுகளை தடைசெய்வதே இவரது பிரதான பணியாகும். (உ+ம்) கிழக்கு மாகாணத்தில் எந்த பாடசாலையும் இது வரை எந்த விளையாட்டுக் குழுவையும் வெளிநாடு ஒன்றுக்கு கூட்டிச் செல்லவில்லை. ஆனால் எமது பாடசாலை அண்மையில் பட்மின்டனுக்காக மலேசியா செல்லும் வேலையில் இப்பயணத்தை தடை செய்வதற்காக பல்வேறுபட்ட தடைகளையும் பட்டிசன்களையும் (Pநவவைழைளெ) அடித்தார். ஆனால் இவரது முறை கேடான பிடிசன்கள் (Pநவவைழைளெ) கல்வி அமைச்சால் இரத்துச் செய்யப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எமது பாடசாலை அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற வருடாந்த நிதிகையாழ்கை மற்றும் கணக்காய்வு போட்டியில் அம்பாரை மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்ட பாடசாலையாகும். இதனை கல்முனை வலயக் கல்விப் அலுவலகத்தின் கணக்காளரிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
· நிதி தொடர்பான விளக்கமளிக்கும் விடியோ தேவை ஏற்படின் பதிவிரக்கம் செய்யப்படும்.
குறிப்பு :- 2013.11.03 திகதி இடம்பெற்ற பாடசாலை மகா சபைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஒன்று பாடசாலையின் கீர்த்திக்கு பாதிப்பை ஏற்படுத்தி அவதூறுகளை செய்து கொண்டிருக்கும் பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக நீதி மன்றம் ஒன்றில் ஆட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமத பாடசாலை மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் சுமத்த முடியாத நிலையில் குறித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் ஏற்கனவே விசாரணை முடிக்கப்பட்ட விடயத்தினை பாடசாலை மீது மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டி பாடசாலை நிருவாகத்தையும் ஆசிரியர்களையும் பொறுப்பாக முன் வந்து வேலை செய்யும் ஆசிரியர்களையும் வீண் பழி சுமத்தி எமது கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்வதே இவரின் குறிக்கோலாகும்.
இவரது இவ்வாரான அறிக்கையினை கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு நலன்விரும்பிகளும் அனைவரும் வண்மையாகக் கண்டிக்கின்றோம்.
நடைபெற்று முடிந்த வேலைகள் விபரம் பின்வருமாறு :-
(போட்டோவடன் இணைக்கப்பட்டுள்ளது)
01. எம்.எம். ஜவாஹிர் இப்றாஹீம் (உதவி அதிபர்) அவர்களுக்கு தரம் 08 மாணவர்களின் வகுப்பறைத்தரைகளை சீமெந்து இட்டு உயர்துவதற்காக ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியிலிருந்து காசேலையாக 35,000 ((Che.no 193233) அதிபராலும், பெற்றோர்களின் பங்பளிப்புடனும் பொறுமதியான வேலைகள் நடந்து முடிந்துள்ளன. (உதவி அதிபர் ஜவாஹிர் இப்றாஹீம் அவர்களுக்கு வரையப்பட்ட காசோலை யார் பெயரில் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
மேலும் இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக செலவிடப்பட்ட பொருட்களின் பில்கள், வவுச்சர்கள் மற்றும் மேசனிடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் கல்முனை வலயக் கல்வி கணக்காய்வாளர் சபையிடம் சமர்ப்பிக்கபட்டுள்ளது.
02. ...............................ஆசிரியர் அவர்களுக்கு தரம் 06,07 மாணவர்களின் வகுப்பறைகளின் தரைத் திருத்தலும் தீந்தை பூசுவதற்குமான கொடுப்பனவுகளாக ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியிலிருந்து காசேலையாக 30,000 ((Che.no 193241) உம் 15,000 ((Che.no 193232)உம் அதிபரால் வழங்கப்பட்டு பொறுமதியான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
மேலும் இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக செலவிடப்பட்ட ,பொருட்களின் பில்கள், வவுச்சர்கள் மற்றும் மேசன், பெயின்டர் இடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் கல்முனை வலயக் கல்வி கணக்காய்வாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
03. ...............................ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலைச் சுற்றாடலை அழகுபடுத்தல் வேலைக்காக ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியிலிருந்து காசேலையாக 24,500 ((Che.no 193248) அதிபரால் வழங்கப்பட்டு பொறுமதியான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
மேலும் இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக செலவிடப்பட்ட பொருட்களின் பில்கள், வவுச்சர்கள் மற்றும் மேசன், பெயின்டர் இடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் கல்முனை வலயக் கல்வி கணக்காய்வாளர் சபையிடம் சமர்ப்பிக்கபட்டுள்ளது.
04. ...............................ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலைச் வகுப்பறை மின் இணைப்பு திருத்துதல் வேலைக்காக ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியிலிருந்து காசேலையாக 20,000ஃ ((Che.no 193248) அதிபரால் வழங்கப்பட்டு பொறுமதியான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
மேலும் இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக செலவிடப்பட்ட பொருட்களின் பில்கள், வவுச்சர்கள் மற்றும் மேசன், பெயின்டர் இடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் கல்முனை வலயக் கல்வி கணக்காய்வாளர் சபையிடம் சமர்ப்பிக்கபட்டுள்ளது.
05. ...............................ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை வகுப்பறை புதிய கதிரை மேசை வேலைக்காக ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியிலிருந்து காசேலையாக 20,000 ((Che.no 193240) உம் காசேலையாக 35,000 ((Che.no 193234) அதிபரால் வழங்கப்பட்டு பொறுமதியான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
மேலும் இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக செலவிடப்பட்ட பொருட்களின் பில்கள், வவுச்சர்கள் மற்றும் மேசன், பெயின்டர் இடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் கல்முனை வலயக் கல்வி கணக்காய்வாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
06. ............................ வெளி நிறுவனம் ஒன்றிற்கு பாடசாலை பைப்லைன் வேலைக்காக ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்ட நிதியிலிருந்து காசேலையாக 25, 000 ((Che.no 193235) அதிபரால் வழங்கப்பட்டு பொறுமதியான வேலைகள் நடந்து முடிந்துள்ளன.
மேலும் இவ்வேலைகளை செய்து முடிப்பதற்காக செலவிடப்பட்ட பொருட்களின் பில்கள், வவுச்சர்கள் மற்றும் மேசன், பெயின்டர் இடமிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அனைத்தும் கல்முனை வலயக் கல்வி கணக்காய்வாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வண்ணம், கல்லூரியின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் , முகாமைத்துவ குழு உறுப்பினர்கள்
Zahira College Kalmunai (ZCK) is one of the best disciplined college in Sri Lanka.It is not possible many teachers cheating government funds in different amounts. But it looks like deputy zonal director have personal ill will with the school
ReplyDelete