'சமூக நல்லிணக்கமே அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தின் அடிப்படை'
சமூக நல்லிணக்கமே அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தின் அடிப்படை எனும் கருப்பொருளில் நடைபெற்ற வடக்கு முஸ்லீம்களின் வெளியேற்றம் 23ம் ஆண்டு நிகழ்வு நாள் ஒஸ்மானியாக் கல்லூரி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதன் போது வட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே. சிவஞானம்,மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன், மற்றும் விஷேட பேச்சாளராக யாழ் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி இரா.சிவச்சந்திரன் அகியோர் கலந்து கொண்டனர்.
எனினும் நிகழ்வு குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பமாகவில்லை என்பதுடன் இதற்கென அதிதிகளாக பலர் அழைக்கப்பட்டிருந்த போதும் கூட அவர்கள் ஒருவரும் நிகழ்விற்கு வருகை தரவில்லை.
மேலும் கடந்த காலங்களில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த மேற்படி நிகழ்வு தற்போது மக்களால் மறைக்கப்பட்டோ,மறுக்கப்பட்டோ வருவதை அவர்களின் கருத்தில் இருந்து அறிய முடிகிறது.
இது தவிர இந்நிகழ்வில் முஸ்லீம் முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்விற்கு எதிர்ப்ப தெரிவித்ததன் காரணமாக மேற்படி நிகழ்விற்கு ஏனைய விருந்தினர்கள் வரவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. தற்போது தீபாவளி பருவகாலம் காரணமாகத்தான் மக்களோ,விருந்தாளிகளோ இந்நிகழ்விற்கு வருகை தரவில்லையென என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment