கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்பு
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான சமகி அமைப்பு என்ற எதிர்க்கட்சிகளின் அமைப்பு இன்று 07-11-2013 கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
கொழும்பு மருதானை டெக்னில் சந்தியில் இருந்து பேரணியாக சென்றவர்கள் கோட்டை ரெயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார, ஜனநாய விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Post a Comment