Header Ads



நிந்தவூரில் தூய பசும்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டம்


(ஏ.எல்.ஜனூவர்)

திரவப்பால் நுகர்வினை ஊக்குவிக்கும் வகையில் நிந்தவூர் கால்நடை வைத்திய பிரிவிற்குட்பட்ட பொதுமக்களுக்கு  தூய பசும்பால் வழங்கும் மூன்றாம் கட்ட நிகழ்வு நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது.

சுமார் 500க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இத்தூய பசும்பாலை அருந்தினர்.

இந்நிகழ்வில் நிந்தவூர் கால்நடை வைத்திய காரியாலயத்தின்  அரச கால்நடை வைத்தியர் ஏ.தையுபா, மாவட்ட கால்நடை வைத்திய காரியாலய அரச கால்நடை வைத்தியர் ஏ.எல்.எம்.றிப்கான், காரைதீவு அரச கால்நடை வைத்தியர் எஸ்.ஈ. குணவர்த்தன, கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்இ  வீ.ஜெயகாந்தன்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான  ஜூனைனா சாபீர், ஏ.எம்.இர்ஷாம், சில்மி சிபானி, விஷ்ருல் மபாசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.