புல்மோட்டை முஸ்லிம்களின் காணிவிடயமாக பாதுகாப்பு அமைச்சில் விசேட கூட்டம்
புல்மோட்டை மற்றும் தென்னமரவாடி பிரதேசங்களில் அண்மைக்காலமாக எதிர் நோக்கி வரும் காணி பிரச்சிணை சம்பந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் குச்சவெளி பிரதேச உப தவிசாளர் தௌபீக் ஆகியோரின் ஏற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்தரையாடலில் புல்மோட்டைப்பிரதேசத்துக்கு பொறுப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் சமது செயலாளர் மௌலவி ஸாலிகீன் உறுப்பினர்களான மௌலவி ஐயூப்கான் கலீல் றஹ்மான் அனைத்துப் பள்ளிகள் ஒன்pறியத்தின் தலைவர் மௌலவி மஹ்மூத் மற்றும் மீன்பிடி சங்கத்தலைவர் ஹனீபா கிராமிய சங்கத்தலைவர் ஐனியப்பிள்ளை உட்பட பலர் கடந்த வியாழக்கிழமை (2013.10.31) பி.ப 2.00 மணியளவில் பாதுகாப்பு அமைச்சின் இடம் பெற்ற சுமார் இரண்டு மணிநேர இக்கலந்துரையாடலில் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டன.
01. புல்மோட்டைப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக படையினரால் பொதுமக்களக்குச் சொந்தமான காணிகள் கடற்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பௌத்த குருவால் éஜா éமி போன்ற திட்டத்திற்காக கையகப்படுத்துகின்ற நடவடிக்கையினால் அண்மைக் காலமாக பொதுமக்கள் வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு நீதி மன்றம் வரை குறித்த பிரச்சினை உருவெடுத்துள்ளது இதனால் மக்கள் கடந்த யுத்தகாலத்தில் பாதிக்கப்பட்டுள்ளது மாத்திரமன்றி தற்பொழுதும் இவ்வாறான காணி கையகப்படுத்தும் தொடர் நடவடிக்கையினால் பாரியதொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள் அதனால் குடியிருப்பு தோட்ட மற்றும் வயல் காணிக்குள் செல்ல முடியாத துர்பாக்கிய நிலையினால் மக்களின் ஜீவணோபாயம் பாதிக்கப்பட்டுள்ளதாவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
02. கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக குறிப்பாக புல்மோட்டை பிரதேசத்திலுள்ளவர்களுக்கு குச்சவெளி பிரதேச செயலகத்தினால் குறித்த காணிக்காண ஆவணங்கள் வழங்கப்படாமையால் இன்று இவ்வாறான அசௌனரியமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இற்றைவரைக்கு மாக ஆரம்ப முதல் பெரும்பாலானோர் காணிகள் விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பித்தும் இதுவரைக்கும் இவர்களுக்கான அனுமதிப் பத்திரங்கள் éர்த்தியாகப்படா நிலை குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் எடுத்துக்கூறப்பட்டது
03. தென்னமரவாடி தமிழ்க்கிராமம் யுத்தகாரணமாக இடம்பெயர்ந்து இன்னும் சரியான முறையில் மக்கள் மீள்குடியேறாத நிலையில் தற்பொழுது மகாவலி அதிகார சபையினூடாக நடைடுறைப்படுத்த இருக்கும் மகாவலி எல் வலையத்துக்காண காணி எல்லைகள் தொடர்பாக அம்மக்களை அனுகி ஆலோசிக்க வேண்டும் மட்டுமல்லாது இவ்விடயமாக குச்சவெளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற கூட்டத்திற்கு அப்பிரதேசத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமை குறித்தும் பதவி ஸ்ரீபுர பிரதேச சபை தவிசாளர் மட்டும் அழைக்கப்பட்டமை குறித்தும் குறித்த பிரதேச செயலகத்தில் பாகுபாடுகள் காட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது
04. காணிகள் படையினரால் கையகப்படுத்தும் போது படையினர் மற்றும் ஏனைய தரப்பினரால் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் பெயர்களையே அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் அரசாங்கத்தின் நன்மதிப்பை மக்கள் மத்தியில் உடைத்தெரிகின்ற செயலாகவே தாம் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் தாம் அமைச்சினுடைய மேலதிக செயலாளரை பிரதேசங்களுக்கு அனுப்பி குறித்த பிரதேசங்ளகிலுள்ள மக்கள் பிரதி நிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்களை உள்ளடக்கியதான குழு ஒன்று அமைத்து பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு பெற்றுத்தருவதாகவும் மேலதிகாமாக எந்த பிரச்சினையும் ஏற்படாத வாறு தாம் உரிய தரப்பினருக்கு அறிவிப்பதாகவும் வாக்குறுதியளித்தனர் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்
Post a Comment