Header Ads



கொழும்பில் குடிசைகள் இல்லாமல் செய்யப்பட்டு, மாடி வீட்டுத் திட்டங்கள் நடைமுறை

கொழும்பு நகரம் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கொழும்பை அண்டிய பகுதிகளில் உள்ள குடிசைகள் இல்லாமல் செய்யப்பட்டு, மாடி வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு செயலாளரும் நகர அபிருத்தி அமைச்சருமான கோட்டாபாய ராஜபக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான துரித அபிவிருத்தி செயற் திட்டத்தின்  கீழ் அமைக்கப்பட்ட “மிகிந்து சேனபுர” 500 வீட்டுத் திட்டம் இந்த மாத்தில் தெமட்டகொட மக்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த திட்டம் தொடர்பில் சிலர் தவறான பரப்புரைகளை வெளியிட்டு வருவதாகவும், அதில் எந்தவித உண்மையும் இல்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.