Header Ads



சச்சினுடைய சாதனை பட்டியலில் இருந்து..!

சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறந்த சச்சின், இன்று தொடங்கும் மும்பை டெஸ்டுடன் பிரியாவிடைபெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மும்பை-யில் கடந்த 1973ல் பிறந்த சச்சின், இளம் வய-தி-லேயே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட-வராக இருந்தார். இவர், 1988ல் நடந்த பள்ளி-க-ளுக்கு இடை-யி-லான போட்டி-யில் சக நண்பர் வினோத் காம்ப்ளி-யு-டன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தார். இதில் சச்சின் மட்டும் 326 ரன்கள் எடுத்தார். இவர், தனது 16வது வய-தில் 1989, நவ.,15ல் கராச்சி-யில் நடந்த பாகிஸ்தா-னுக்கு எதி-ரான டெஸ்ட் போட்டி-யில் அறி-மு-க-மா-னார். இப்போட்டியில் 15 ரன்னுக்கு அவுட்டானார். பின் எழுச்சி கண்ட இவர், தனது 17வது வய-தில் இங்கி-லாந்துக்கு எதி-ராக முதல் சதம் கடந்தார்.

சாதனை வீரர்:
தொடர்ந்து அசத்திய இவர், கிரிக்கெட் வரலாற்றில் அனேகமாக அனைத்து சாதனைகளையும் தகர்த்தார். அதிக ரன், 100 சதம், அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றார். ஆமதாபாத்தில், 1999ல் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம், தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். "ரன் மெஷினாக' விளங்கிய இவர், 2011ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டில்லியில் நடந்த போட்டியில், டெஸ்ட் அரங்கில் 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.

இதுவரை இவர், டெஸ்டில் "டிரிபிள் செஞ்சுரி' அடித்ததில்லை. இக்குறையை தனது கடைசி டெஸ்ட் போட்டியின் மூலம் நிறைவேற்றிக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் இவர், தனது பழைய "பார்முக்கு' திரும்பினால், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் (400 ரன்கள், எதிர்-இங்கிலாந்து, 2004) சாதனையை முறியடிக்கலாம். இந்த போட்டியில் இந்திய அணி அசத்தும்பட்சத்தில், பிறந்த ஊரில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றியுடன் சச்சின் விடை பெறலாம்.

153
இந்தியாவின் சச்சின், இதுவரை 199 டெஸ்டில் 51 சதம் உட்பட 15,847 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மும்பையில் இன்று துவங்கவுள்ள டெஸ்டில் இவர், 153 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், டெஸ்ட் வரலாற்றில் 16 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைக்கலாம்.

ஆஸி.,யுடன் அதிகம்
ஒவ்வொரு அணிக்கு எதிராக சச்சின் அடித்த டெஸ்ட் ரன்கள்:
எதிரணி போட்டி 100/50 ரன்கள் அதிகபட்சம்
ஆஸ்திரேலியா 39 11/16 3630 241*
இங்கிலாந்து 32 7/13 2535 193
இலங்கை 25 9/6 1995 203
தென் ஆப்ரிக்கா 25 7/5 1741 169
நியூசிலாந்து 24 4/8 1595 217
வெஸ்ட் இண்டீஸ் 20 3/9 1556 179
பாகிஸ்தான் 18 2/7 1057 194*
ஜிம்பாப்வே 9 3/3 918 201*
வங்கதேசம் 7 5/0 820 248*
மொத்தம் 199 51/67 15847 248*

ரன் "மெஷின்'
டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் முதலிடம் வகிக்கிறார். இவர், 198 டெஸ்டில் 51 சதம், 67 அரைசதம் உட்பட 15,837 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் பத்தாயிரம் ரன்களை கடந்த வீரர்கள்:
வீரர் போட்டி ரன்கள் 100/50 அதிகபட்சம்
சச்சின் (இந்தியா) 199 15847 51/67 248*
பாண்டிங் (ஆஸி.,) 168 13378 41/62 257
டிராவிட் (இந்தியா) 164 13288 36/63 270
காலிஸ் (தெ.ஆ.,) 164 13140 44/58 224
லாரா (வெ.இ.,) 131 11953 34/48 400*
பார்டர் (ஆஸி.,) 156 11174 27/63 205
ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 168 10927 32/50 200
சந்தர்பால் (வெ.இ.,) 149 10897 28/61 203*
ஜெயவர்தனா (இலங்கை) 138 10806 31/45 374
சங்ககரா (இலங்கை) 117 10486 33/42 287
கவாஸ்கர் (இந்தியா) 125 10122 34/45 236*

51 சதம்
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் முன்னிலை வகிக்கிறார். இதுவரை இவர் 51 சதம் அடித்துள்ளார். இவரை அடுத்து தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (44), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (41), இந்தியாவின் டிராவிட் (36), கவாஸ்கர் (34), வெஸ்ட் இண்டீசின் லாரா (34), இலங்கையின் சங்ககரா (33), ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் (32), இலங்கையின் மகிளா ஜெயவர்தனா (31), ஆஸ்திரேலியாவின் ஹைடன் (30) ஆகியோர் அதிக சதத்தை பதிவு செய்தனர்.

67 அரைசதம்
டெஸ்ட் போட்டியில் அதிக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் முதலிடம் வகிக்கிறார். இதுவரை 199 டெஸ்டில் 67 அரைசதம் அடித்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் டிராவிட் (63), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (63), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (62), வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் (61), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (58) ஆகியோர் உள்ளனர்.

ராசியான 4வது இடம்
டெஸ்ட் போட்டிக்கான பேட்டிங் வரிசையில், "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சினுக்கு 4வது இடம் ராசியானதாக அமைந்தது. இதுவரை 176 போட்டியில் 4வது இடத்தில் களமிறங்கிய சச்சின், 44 சதம், 57 அரைசதம் உட்பட 13,418 ரன்கள் எடுத்துள்ளார்.
பேட்டிங் வரிசையில் சச்சினின் செயல்பாடு:
பேட்டிங் வரிசை ஆண்டு போட்டி ரன்கள் அதிகம் 100/50
2வது இடம் 1999-99 1 15 15 0/0
4வது இடம் 1992-2013 176 13418 248* 44/57
5வது இடம் 1993-2011 26 1552 169 5/6
6வது இடம் 1989-2008 14 745 148* 2/4
7வது இடம் 1989-1991 3 117 41 0/0

115 "கேட்ச்'
டெஸ்ட் வரலாற்றில், அதிக "கேட்ச்' பிடித்த இந்திய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர், 115 "கேட்ச்' பிடித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் டிராவிட் (210 கேட்ச்), லட்சுமண் (135) ஆகியோர் உள்ளனர். சர்வதேச அளவில், 19வது இடத்தை வெஸ்ட் இண்டீசின் கூப்பருடன் (115 கேட்ச்) பகிர்ந்து கொண்டுள்ளார்.

46 விக்கெட்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் பவுலராகவும் நம்பிக்கை அளித்தார். இதுவரை விளையாடிய 199 டெஸ்டில் 46 விக்கெட் வீழ்த்தினார்.
* டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 விக்கெட் வீழ்த்தினார். பாகிஸ்தான் (9 விக்கெட்), நியூசிலாந்து (7), தென் ஆப்ரிக்கா (7), வங்கதேசம் (5), வெஸ்ட் இண்டீஸ் (3), இங்கிலாந்து (2), ஜிம்பாப்வே (2) அணிகளுக்கு எதிராகவும் விக்கெட் கைப்பற்றினார். இவர், இலங்கைக்கு எதிராக 30 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட் கூட பெறவில்லை.
* மும்பையில் 2000ம் ஆண்டு நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பவுலிங்கில் அசத்திய சச்சின், 5 ஓவரில் 10 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். அதன்பின் 2001ல் கோல்கட்டாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில், 11 ஓவரில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

கடைசி டெஸ்டில் இவர்கள் எப்படி...
ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் தனது கடைசி டெஸ்டில் 4 ரன்கள் எடுத்திருந்தால், சராசரி 100 ஆக உயர்ந்திருக்கும். ஆனால், முதல் இன்னிங்சில் "டக்' அவுட்டாகி ஏமாற்றினார். இந்தியாவின் கங்குலி முதல் இன்னிங்சில் 85 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் "டக்' அவுட்டானார். சச்சின் தனது கடைசி டெஸ்டில் சதம் அடிப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம். சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக திகழ்ந்த சில வீரர்களின் கடைசி டெஸ்ட் (2 இன்னிங்சில்) செயல்பாடு.
வீரர் போட்டி எதிரணி ரன் விக்., முடிவு ஆண்டு
கவாஸ்கர்(இந்தியா) 125 பாக்., 22,96 - தோல்வி 1987
கபில் தேவ்(இந்தியா) 131 நியூசி., 18,- 1-29, 1-43 டிரா 1994
கங்குலி(இந்தியா) 113 ஆஸி., 85,0 - வெற்றி 2008
டிராவிட்(இந்தியா) 164 ஆஸி., 1,25 - தோல்வி 2012
பிராட்மேன் (ஆஸி.,) 52 இங்கி., 0,- - வெற்றி 1948
ஸ்டீவ் வாக் (ஆஸி.,) 168 இந்தியா 40,80 - டிரா 2004
பாண்டிங் (ஆஸி.,) 168 தெ.ஆப்ரிக்கா 4,8 - தோல்வி 2012
மெக்ராத் (ஆஸி.,) 124 இங்கி., 0,- 3-67,3-38 வெற்றி 2007
வார்ன் (ஆஸி.,) 145 இங்கி., 71,- 1-69, 1-23 வெற்றி 2007
ரிச்சர்ட்ஸ் (வெ.இண்டீஸ்) 121 இங்கி., 2,60 - தோல்வி 1991
லாரா (வெ.இண்டீஸ்) 131 பாக்., 0,49 - தோல்வி 2006
போத்தம் (இங்கி.,) 102 பாக்., 2,6 0-9,- தோல்வி 1992
முரளிதரன் (இலங்கை) 133 இந்தியா 5,- 5-63, 3-128 வெற்றி 2010
சச்சின் 200 வெ.இண்டீஸ் - - 2013

சச்சின் கோயில்
பீகாரைச் சேர்ந்த நடிகர் மனோஜ் திவாரி, தனது சொந்த ஊரான அடர்வாலியாவில், சச்சினுக்கக கோயில் கட்டி வருகிறார்.
இதுகுறித்து திவாரி கூறுகையில்,""கடந்த 2011ல் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சச்சின், கேப்டன் தோனி, யுவராஜ் சிங் ஆகியோருக்கு கோயில் கட்ட திட்டமிட்டிருந்தேன். வரும் 2014 ஜனவரியில் பணிகளை முடித்து கோயில் திறக்க முடிவு செய்திருந்தோம். தற்போது சச்சின் ஓய்வை அறிவித்த காரணத்தினால், 6000 சதுரஅடி பரப்பளவில் உள்ள இடத்தில் விரைவில் இவரது சிலையுடன் கூடிய கோயில் விரைவில் திறக்கப்படும்,'' என்றார்.

தொடரும் முதலிடம்
ஒரு-நாள் போட்டி-யில் அதிக ஆண்டு விளை-யா-டி-ய-வர்கள் வரிசையில் சச்சின் முதலிடத்தில் நீடிக்கிறார். இப்பட்டியலில் "டாப்-5' வீரர்கள்.
வீரர் முதல் போட்டி கடைசி போட்டி ஆண்டு-கள் போட்டி
சச்சின் (இந்தி-யா) 18.12.1989 18.11. 2013 22 ஆண்டு, 91நாட்கள் 463
ஜெய-சூர்யா (இ-லங்கை) 26.12. 1989 28.6. 2011 21 ஆண்டு, 184 நாட்கள் 445
மியான்தத் (பாக்.,) 11.6. 1975 9.3.1996 20 ஆண்டு, 272 நாட்கள் 233
அர-விந்த டி சில்வா (இ-லங்கை) 31.3. 1984 18.3. 2003 18 ஆண்டு, 352 நாட்கள் 308
கூச் (இங்கி-லாந்து) 26.8. 1976 10.1. 1995 18 ஆண்டு, 137 நாட்கள் 125

5வது இடத்தில்
டெஸ்ட் போட்டி-யில் அதிக ஆண்டு விளை-யா-டி-ய-வர்கள்:
வீரர் முதல் போட்டி கடைசி போட்டி ஆண்டு-கள் போட்டி
ரோட்ஸ் (இங்கி.,) 1.6. 1899 12.4. 1930 30 ஆண்டு, 315 நாட்கள் 58
குளோஸ் (இங்கி.,) 23.7.1949 13.7. 1976 26 ஆண்டு, 356 நாட்கள் 22
ஊலே (இங்கி.,) 9.8.1909 22.8. 1934 25 ஆண்டு, 13 நாட்கள் 64
ஹெட்லே (வெ.இ.,) 11.1.1930 21.1. 1954 24 ஆண்டு, 10 நாட்கள் 22
சச்சின் (இந்தி-யா) 15.11. 1989 18.11. 2013 24 ஆண்டு 3 நாட்கள் 200

ஒரு "டுவென்டி-20'
சர்வதேச "டுவென்டி-20' போட்டியை பொறுத்தவரை சச்சின் ஒரே ஒரு போட்டியில் விளையாடினார். ஜோகனஸ்பர்க் நகரில் 2006ல் (டிச., 1) நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய இவர், 10 ரன்களுக்கு அவுட்டானார். பவுலிங்கில் 2.3 ஓவர்கள் வீசிய இவர், 12 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

No comments

Powered by Blogger.