வடக்கு - கிழக்கு மாகாண சபையும், தமிழ் மக்களின் இழுபறி நிலைகளும்..!
(சத்தார் எம் ஜாவித்)
இலங்கையின் வரலாற்றின் அடிப்படையில் அடிப்படையில் அதன் அமைவிடம், புவியில் மற்றும் கால நிலை போன்ற விடயங்களின் அடிப்படையில் ஒன்பது மாகாணங்களை தன்னகத்தே கொண்டதாகவும் இவ் ஒன்பது மாகாணங்களிலும் பல்லின சமுகங்கள் வாழ்ந்து வருவதும் முக்கியமானதாகும்.
இதன் அடிப்படையில் ஆரம்ப காலத்தில் இலங்கையின் ஆட்சி மொழி சிங்களம் என்றதனால் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள் அதிகமாக காணப்பட்டதனால் இப்பகுதிகளில் தமிழ் மொழி ஆட்சி முறையின் அவசியம் உணரப்பட்டு பல ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் முயற்சிகள் மேற் கொண்டபோதிலும் ஆட்சியில் இருந்து வந்த அரசுகள் அதற்கு ஆக்கபூர்வமான கவனஞ் செலுத்தப்படாது இழுத்தடிப்புக்களையே மேற்கொண்டிருந்தன.
இதுபோன்ற பல விடயங்களைக கவனத்தில் கொண்டு 1987 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் ரதஜீவ் காந்தியும் இணைந்து தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தி இலங்கை அரசியல் யாப்பில் சிறு மாற்றம் செய்யும் வகையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மேற் கொண்டு வடகிழக்கை இணைப்பதுடன் 13வது திருத்தச் சட்டத்தைக் கைச்சாத்திட்டு அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.
இந் நடவடிக்கையின் காரணமாகவே வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டு ஒரு மாகாண சபையாக அரச நிருவாக நடவடிக்கைகள் கடந்த காலங்களில் இடம்பெற்று வந்தன இதன் மூலம் வடகிழக்கு மக்கள் தமது தாயகப் பகுதிகளில் சொந்த மொழியில் தமது கருமங்களை ஆற்றுவதற்கான வழி பிறந்தது.
இவ்வாறு வடகிழக்கில் நிருவாக நடைமுறைகள் இடம்பெற்ற வந்த போதிலும் அதனைப் பிரிக்கவேண்டும் என்ற சில பெரும்பான்மை இனவாதிகளால் மேற் கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் நீதி மன்றம் வரை சென்று கடந்த 2006 ஆம் ஆண்டு நீதி மன்றத் தீர்ப்பின்படி வடமாகணமும் கிழக்கு மாகாணமும் தனித்தனி மாகாணங்கள் என மீண்டும் பிரிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலைமைகள் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களிடத்தில் பாரியதொரு பாதிப்பையும், விரக்தி நிலைகலளயும் ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் தமிழ் பேசும் மக்கள் தமது சலுகைகளும் உரிமைகளும் பறிபோய்விடும் என்ற பயமே காரணம் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ் பேசும் மக்களுக்களுக்கான சகல விடயங்களும் மறுக்கப்பட்டதன் காரணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது இதுவே வடகிழக்கில் ஆயுதப் போராட்டம் ஏற்பட வழிவகுத்த உண்மையாகும்.
ஆரம்ப காலங்களிலேயே வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்குரிய உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி இருந்தால் அல்லது அவர்களுக்குரிய பங்களிப்புக்களைச் சரியாக கடந்த கால அரசாங்கங்கள் செய்திருந்தால் கடந்த மூன்று தஸாப்த கால கொடிய யுத்தமும் அதன் அழிவுகளும் இடம்பெற்றிருக்காதல்லவா?
கடந்த காலங்களில் இருந்த பெரும்பான்மை ஆட்சியாளர்கள் விட்ட பிழைகளே இலங்கையின் மூன்று தஸாப்த கால யுத்தத்திற்கும் அழிவுகளுக்கும் வழிவகுத்துவிட்டனர். அவர்கள் அனைவருமே இலங்கையர் என்ற உணர்வுடன் செயற்பட்டிருந்தால் வடகிழக்கு இணைப்பும், 13வது உள்ளிட்ட திருத்தச் சட்டங்களும் தேவைப்பட்டிருக்காது.
இன்று வடமாகாண மக்கள் வடகிழக்குப் பிரிவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் தமக்கு அது பாரியதொரு இழப்பாகவேயுள்ளதாக கூறுகின்றனர். இந்த விடயத்தில் அரச சார்பானவர்கள் வடகிழக்கு இணைப்புத் தேவையில்லை என்ற வாத்தில் இருந்தாலும் பெரும்பான்மையான மக்களின் என்னக்கரு வடகிழக்கு இணைய வேண்டும் என்பதே இந்த வாதங்கள் கடந்த வடமாகாண சபையின் பின்னர் தமிழ் பேசும் மக்களிடத்தில் மட்டுமல்லாது அரசியல் வாதிகளிடமும் வடகிழக்கு இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்த வன்னமேயுள்ளன.
தென்னிலங்கையில் உள்ள பேரினவாதச் சக்திகளே தற்போது வடமாகாண மக்களை சுதந்திரமாக வாழ விடாது அவர்களின் சகல அரசியல் மற்றும் பொருளாதார விடயங்களில் தலையிட்டு சமாதானத்தையும், இயல்பு வாழ்க்கையையும் விரும்பும் மக்களை குழப்புவதாகவும் 13வது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக் முயற்சித்து வருவதாகவும் அதற்கான சூழலையும் இயல்பற்ற நிலைகமைகளையும் தோற்றுவித்து வருவதாகவும் தமிழ் பேசும் மக்களால் விஷனம் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கிழக்கு மக்கள் எதிர்பார்த்த பலன் எதனையும் இதுவரை வழங்க வில்லை அல்லது அதனால் மக்கள் பூரண பயன் எதனையும் அடையவில்லை என்ற கருத்துக்களே கிழக்கு மாகாண மக்களிடத்தில் உள்ளது. இது தொடர்பாக பல ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் கூட அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அரசின் ஆட்சியே வடக்கில் இடம்பெறுகின்றது என்றும் அந்த அதிகாரம் உள்ள அரசியல்வாதிகளால் கூட வடமாகாண மக்களின் உணர்வுகiளுப் புரிந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்து கொடுக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குறை கூறுகின்றனர்.
இந்ந நிலைமைகளைப்போல் வடக்கிலும் ஏற்படுத்தி தமிழ் மக்களின் சுயாதீனமானதும் சமாதானமுமான நிலைமைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கங்களே இனவாதிகளின் அடிப்படையாகும். வரலாற்றில் முதல் முதலாக இடம்பெற்றதே வடமாகாண சபைத் தேர்தலாகும் இந்தத் தேர்தல் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நடைபெற்றது மட்டுமல்லாது அது ஒரு வடமாகாணத்தின் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்துவிட்டது.
இந்த திருப்புமுனை வடமாகாண மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகவே அம்மக்கள் கருதுகின்றனர். இந்த நிலைமைகள் பெரும்பான்மை இனவாதிகளுக்கு கிடைத்ததொரு இடியாகும். இவ்வாறானதொரு தோல்வி நிலைமைகளை ஏற்றுக் கொள்ளவும், சகித்துக் கொள்ளவும் முடியாத இனவாதிகள் வடமாகாண மக்களின் உரிமைகளுக்கும், சலுகைகளுக்கும் குந்தகத்தை ஏற்படுத்தி தடைகளை போடுவதற்கான பாரிய முயற்சிகளை நேரடியாகவும்,மறைமுகமாகவும் மேற் கொண்டவருவதாக தமிழ் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக வடமாகாண இணைப்பு ஏற்படக் கூடாது 13வது திருத்தச் சட்டம் ரத்துச் செய்யப்படவேண்டும் என்ற பிற்போக்கான வாதங்களை தமது இயலாத் தன்மையால் ஏற்படுத்துவதாக சமாதான விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இலங்கையைப் பொருத்தவரையில் மாகாண சபைச் சட்டங்கள் எல்லாவற்றிற்கும் ஒன்றாக இருக்கும்போது வடமாகாண சபையின் அதிகாரங்களை குறிவைப்பதும் அதன்மீது தாக்கம் செலுத்துவதும் வேடிக்கையானதொரு விடயம் என புத்தி ஜீவிகள் கருத்து வெளியிடுகின்றனர்.
வடமாகாணத்தின் அதிகாரங்கள் மீது இனவாதிகள் தாக்கம் செலுத்துவதை நோக்கும்போது ஏனைய மாகாணங்களைவிட வடமாகாணத்தின் அதிகாரங்கள்தான் அதிகமானதென கருதப்படுவதாக அமைகின்றது என்கின்றனர்.
இன்று அரசியல் அரங்கில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பற்றிப் பார்க்கும்போது பல அரசியல் கட்சிகள் வடமாகாணம் கிழக்குடன் இணையவேண்டும் என்ற வாதத்திலும் அதற்கான அலுத்தங்களை அரசுக்கும், சர்வதேசத்திற்கும் கொடுப்பதைக் கூட காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் அரசின் பங்காளிக் கட்சியாக இருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13வது திருத்தச் சட்டத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதென்ற கொள்கையில் ஏனைய எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும்.
உண்மையில் மாகாண சபை ஆட்சியில் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் ஏதோ குறைந்தளவாவது சில சலுகைகள் இருப்பதால் அதன் மூலமாவது சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் ஓரளவு தீரும் என்ற விடயமும் இருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இன்று வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுல் வடகிழக்குப் பிரிப்பு ஒரு மக்கிய அம்சமாகவும் அதனை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவுமே கருத்து வெளியிடுகின்றனர். எது எவ்வாறாக இருந்தாலும் இலங்கை ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் எல்லமாகாணங்களில் உள்ள மக்களினதும் நடவடிக்கைகளில் சமமான அரசியல் நிலைமைகளையே கடைப்பிடிக்கவேண்டும் மாறாக வடக்கிற்கு ஒன்று தெற்கிக்கு ஒன்று என்ற போக்குகள் இனியும் கடைப்பிடிக்கப்படுமாயின் அது கடந்த கால துன்பியல் நிலைமைகளுக்கு மீண்டும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தோற்றுவித்து விடும் என்பதில் ஐயமில்லை.
இன்று தென்பகுதியை எடுத்துக் கொண்டால் ஒரு சில இனவாதக் கட்சிகள் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் சமய விடயங்கள் மீதும் இனவாதத்தைக் கக்கிக் கொண்டு மீண்டும் ஒரு பாரிய அழிவுகளுக்கும், இயல்பற்ற நிலைமைகளுக்குமான வழிவகைகளையே நாளாந்தம் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம அந்தஸ்துகளுடன் வாழுவதையே விரும்புகின்றனர். இந்த நிலைமைகள் இன்று ஏற்பட்டாலும் இலங்கை ஒரு சமாதான நாடாக திகழும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை.
ஆனால் இன்று இலங்கையில் இனவாதம் அரசியல் ரீதியாக து10பமிடப்பட்டு விட்டது இதற்குக் காரணம் சில அரசியல் தலைமைகளே. இவர்கள் தாமும் வாழமாட்டார்கள் மற்றவர்களையும் வாழவிடமாட்டார்கள் என்ற போக்கில் கொடிய யுத்தத்தின் பின்னர் மேற் கொள்ளப்பட்ட வெறிறயையாவது சந்தோசமாக அனுபவிப்பதற்கு குந்தகம் விளைவிக்கும் தீய செயற்பாட்டாளர்களாகவே காணப்படுகின்றனர்.
கடந்த கால துன்பியல் நிலைமைகளை இலங்கைவாழ் மக்களில் வடகிழக்கு உட்பட பல பாகங்களில் உள்ள மக்கள் தாராளமாகவே அனுபவித்துவிட்டனர் இனியும் இவ்வாறான நிலைமைகளும், நிகழ்வுகளும் இடம்பெறாதிருப்பதற்கு தேவையான விட்டுக் கொடுப்புடனான தூர நோக்குடன் செயற்படவேண்டிய காலமே தற்போதுள்ள தேவைப்பாடாகும்.
வடமாகாண மக்கள் கடந்த காலங்களில் பட்ட அவலங்களைவிட தற்போதுள்ள வடமாகாண சபை கிழக்கு மாகாணத்துடன் இணைய வேண்டும் என்ற இழுபறி நிலை நாளாந்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்ட வன்னமேயுள்ளன.
எனவே இலங்கையின் மக்கள் எப்பாகத்தில் உள்ளவர்களானாலும் அவர்களின் கருத்துக்கள், உணர்வுகள் முதலில் கவனத்தில் கொள்ளப்பட்டு அவர்களின் தேவைகள் பிரNதுச வாரியாக இனங்காணப்படல் வேண்டும். அதன் மூலம் மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் ஏற்படுத்துவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை சமய ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான விடயங்களை காரணமாக வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்புக்களை உடன் நிறுத்தி அதற்கான தடுப்பு முறைமைகளை சட்டரீதியாக மேற்கொள்வதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்புக்களை ஓரளவு நிவர்த்தி செய்து கொள்ளக் கூடியதொரு இலங்கையாக இலங்கையை கட்டியெழுப்பலாம்.
Post a Comment