கல்முனை மாநகர சபையின் மேயர் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை த.தே.கூட்டமைப்பிற்கு இல்லை
கல்முனை மாநகரசபையின் கடந்தகால மேயர் பற்றியோ எதிர்கால மேயர் பற்றியோ சிந்திக்க வேண்டிய தேவை த.தே.கூட்டமைப்பிற்கு இல்லையென த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை எதிர்க்கட்சி உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபை மேயர் சிராஸ் ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி தொடர்பாக கருத்துக்கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 2014ஆம் ஆண்டு கல்முனை மாநாகர சபையின் வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் மக்களினுடைய அபிவிருத்தி, அபிலாசை வேலைவாய்ப்புக்கள் என்பன சரியான விதத்தில் பங்கிடப்படுவதோடு இங்கு வாழும் தமிழர்களின் வீதாசாரத்திற்கு ஏற்ப மூன்றில் இரண்டு பங்கினை தமிழ்ப் பகுதிகளில் உள்ள சகல பிரதேசங்களுக்கும் பயன்படும் விதத்தில் பங்கீடுகள் அமைந்திருந்தால் சமர்ப்பிக்கப்டும் வரவு செலவுத்திட்டத்தினை முழுமையாக ஆதரிப்போம்.
அதைவிடுத்து எமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்ய முடியாத வரவுசெலவுத்திட்டமாக அது அமையுமாக இருந்தால் அதனை எமது கட்சி எதிர்க்கும் என்பதில் மாற்றுக்ருத்திற்கு இடமில்லை.
கல்முனை மாநகரசபையின் முதல்வர் தெரிவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக தலையிட வேண்டிய தேவை எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை அது அவர்களினுடைய உள்வீட்டு விவகாரம்.
கல்முனை மாநகர சபையின் முதல்வராக யார்வந்தாலும் எங்களது தமிழ்மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து பங்கீடுகளும் சரியான முறையில் பங்கிடப்டுமாக இருந்தால் அவர்களுக்கான ஆதரவினை வளங்குவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
எது எப்படி இருந்தாலும் எங்களது கட்சியின் உயர்மட்ட ஆலோசனையின் படியே எமது இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.
Post a Comment