வழிதவறிய உலமாக்களும், நிர்க்கதியாகிப்போன முஸ்லிம் சமூகமும்...!
(முகமது காமில்)
இன்றைய நிலையில் மார்க்க ரீதியாக எமது சமூகத்தை வழிநடத்தக் கூடியதொரு கட்டுக்கோப்பான அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையையும் அதில் அங்கம் வகிக்கும் உலமாக்களையும் தவிர வேறொன்று இல்லை இருந்த போதிலும் அண்மைக்காலங்களில் நடைபெறும் சம்பவங்களின் பின்னணியில் இருந்து மக்களை வழிநடத்துவதில் ஜம்மியத்துல் உலமா சபையானது தனது பாதையை விட்டு சற்றே விலகி பயணிக்க தொடங்கியதன் விளைவு அதற்குரிய சமூக அந்தஸ்த்தை பெருமளவு இழந்த நிலை உருவாகியுள்ளது...
இதற்க்கெல்லாம் காரணகர்த்தா யார்??
அதில் அங்கம் வகிக்கும் உலமாக்களே தவிர வேறில்லை...
பல தசாப்தங்களுக்கு முன் எமது சமூக கட்டமைப்பானது உலமாக்களை முன் நிறுத்தியே அமைந்திருந்தது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை இன்றைய நிலையில் உலமாக்களுக்கு உரிய மரியாதை இல்லை அவர்களை கௌரவ படுத்தக்கூட யாருக்கும் மனமும் இல்லை விருப்பமும் இல்லை இதற்கெல்லாம் காரணம் யார்??
ஒரு சில உலமாக்கள் என்ற போர்வையில் உள்ள விசமிகள் தங்களது சுய தேவைகளுக்காக தொன்று தொட்டு வந்த பழமை வாய்ந்த கருத்துக்களை மக்களிடம் பரப்புவதை அவர்கள் விரும்பவில்லை அவர்கள் உலமாக்களின் கருத்தையும் குரானையும் இப்போது உற்று நோக்குகின்றனர் அவர்களின் கருத்துகளில் பிழைகளை காணும் இடத்து அதை விமர்சனம் செய்து அவர்களின் நம்பிக்கை தன்மையை கேள்விக்குறியாக்கு கின்றனர்.
(இது பெரிய விடயம் இதை விவாதிக்க நேரம் இடம் கொடுக்காது)
இதெல்லாம் இருக்க இன்றைய நிலையில் எமது இலங்கை தீவில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பாரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் எமது சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு உலமாக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது இது யாரும் மறுக்கமுடியாது. மார்க்கத்தின் பால் எமது சமூகத்தை ஒன்றிணைக்க வேண்டிய கடமையும் உலமக்காளுக்கே உள்ளது.
ஆனால் இங்கு நடப்பது என்ன...?? சற்று யோசியுங்கள்..!!
உலமாக்களும் நடிகர்களும் ஒன்றாகிவிட்டனர் நாடக பத்திரத்துக்கும் கதை களத்துக்கும் ஏற்றவகையில் தனது தோற்றத்தை மாற்றக்கூடிய வகையில் உலமாக்களும் உலமா சபையும் மாறியதன் பின்னணி தான் என்ன யாரும் சிந்தித்த துண்டா??
நிச்சயமாக அரசியல் பெரும் காரணம், சத்திய இஸ்லாத்திற்காக தனது உயிரையே இழந்த சகாபாக்கள்,எத்தனையோ பெரும்தகைகள் உலமாக்கள் வரிசையில் இன்றைய உலமாக்கள் வெறும் பெயர், பதவி ஆடம்பரம் போன்றவற்றுக்காக இஸ்லாமிய சட்டங்களையே மாற்றக்கூடிய அளவுக்கு துணிந்து விட்டனர் அதே நேரம் உயிர் பயமும் பெரும் காரணம் இஸ்லாதுக்காக உயிரை அர்ப்பணிக்க கூட முடியாத உலமாக்களே தற்பொழுது எம்முன்னுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்லுமிடத்து இலங்கை தீவில் அண்மைக்கால சம்பவங்களான ஹலால் பிரச்சினை மற்றும் பெருநாள் பிறை தொடர்பான சர்ச்சை போன்றவற்றில் சரியான மற்றும் வலுவான முடிவுகளை எடுக்க முடியாத உலமா சபையும் உலமாக்களும் தான் தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எமது முஸ்லிம் சமூகத்தை கேவலப்படுத்தி விட்டனர் ஒரு சிறிய நாட்டில் குறைந்த அளவு முஸ்லிம் சனத்தொகை உள்ள நிலையில் பல்வேறு தினங்களில் பெருநாள் கேட்கவே அருவருக்க தக்க சம்பவமாக உள்ளதல்லவா..!!
இனிவரும் காலங்களில் இதற்க்கான தீர்வுதான் என்ன???
உலமா சபையை மீள் புனருத்தானம் செய்தல் வேண்டும் குறிப்பாக இலங்கையில் உள்ள சகல இஸ்லாமிய மார்க்க குழுக்களும் ( குறிப்பாக தப்லீக்,தௌஹீத்,சுன்னத்துவல் ஜமாஅத்,இன்னும்பல ) உள்ளடக்கப்பட வேண்டும் தலைமை மற்றும் நிருவாக உறுப்புரிமை கூட வருடங்களுக்கு ஒருமுறையாவது மற்றம் செய்யப்படல் வேண்டும் அப்போதுதான் அரசியலுக்கு அப்பால்பட்ட ஒரு சக்தி மிக்க ஒரு அமைப்பாக ஜம்மியத்துல் உலமா உருவாகும். இதற்க்கு பொதுமக்களாகிய நாமும் ஒன்றிணைந்து செயல் படுத்தல் வேண்டும்.
இல்லாவிட்டால் எமது சமூகம் பாரியதொரு அழிவை எதிவரும் காலங்களில் எதிர்நோக்கும் எம்மை படைத்த ரப்பை தவிர யாராலும் எம்மை காப்பாற்றவே முடியாது.
உலமா பெரும்தகைகளே தயவு செய்து சிந்தியுங்கள்..!!
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு தந்த நிஹ்மத்து மார்க்க அறிவு அதை சரியான வழியில் பயன்படுத்தி எமது சமூகத்தை சீரானா பாதையில் பயணிக்க செய்யுங்கள் இல்லாவிட்டால் இறைவனின் கோபத்துக்கு உள்ளாகி அதன் பிரதி பலா பலன்களை அனுபவிப்பீர்கள் ,,,
எமது சமூகமே நீயும் திருந்த வேண்டும்...!!
கண்ணிய மிக்க உலமாக்களை கண்ணியப்படுத்தவேண்டும் எமது சமூகத்தில் விசம கருத்துகளை பரப்பும் உலமாக்கள் போர்வையில் உள்ள கறுத்த ஆடுகளை கண்டுபிடித்து சமூகத்தின் மத்தியில் அடையாளப்படுத்த வேண்டும். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்.
எல்லாம் எல்லாம் வல்ல இறைவா எமது சமூகத்துக்கு நடக்கும் நடக்க இருக்கும் கொடுமைகளை போக்கி அமைதியான சாமதானமான வாழ்வை எமக்கு வழங்கி எமது சமூகத்தை பாதுகாத்து அருள் புரிவாயாக...!! ஆமீன்
நாட்டின் இப்போதைய நிலைமையில் எமது சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை வெறுமனே உலமாக்கள் மீது சுமத்த முடியாது. அதை ஒவ்வொரு இலங்கை முஸ்லிமும் தான் வாழும் சூலழலில் தன்னால் முடிந்தவாறு சமூக அமைப்புகளை நிறுவி போராட வேண்டும்.
ReplyDeleteமேலும் உலமாக்களும் மனிதர்களே. அவர்கள் தம் உயிரை அர்பணிக்க வேண்டும் என சொல்லும் கட்டுரையாளர், ஏன் சாதாரண மக்களும் தமக்கு எதிராக தன சமூகத்துக்கு எதிராக பிரச்சினைகள் வரும் போது உயிரை அர்பணித்து போராட வேண்டும் என்ற கருத்தை மறந்து விட்டார்.
சாதாரண மனிதர்கள் சமூகத்தை வலிகாட்டுகின்றோம் என்று முன்வரவில்லை, உலமாக்களும், அரசியல்வாதிகளுமே இரு வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர். தமது பணியை நேர்மையாகவும், சரியாகவும் செய்ய முடியாவிட்டால், அவர்களிடம் தான் கேள்வி கேட்க வேண்டும். சாதாரண மனிதர்களுக்கும் அதே அளவு பொறுப்பு உள்ளதாக கூறி பணத்திற்கும் பதிவிக்கும், அரசியல் ஆசைக்கும் விலைபோன உலமாக்களை காப்பாற்ற முயலக் கூடாது.
ReplyDelete(யாழ் முஸ்லிம். எனது முன்னைய குறிப்பை இன்னமும் காணவில்லையே?)
அரசியல் ஒரு சாக்கடை, ஆனால் உலமாக்கள் தீனை சுமந்தவர்கள், அவர்களே சமுதாயத்தை ஏமாற்றினால்????
ரிஸ்வி முப்தி வர்கள் கட்டாயமாக பதவி விலக்கப்படல் வேண்டும்.
அத்துடன், தன்னைத் தானே வின்ன்வெளி விஞ்சானிகள் என்று சுய பிரகடனம் செய்துகொண்டுள்ள அரைகுறையின் ஆலோசனைகளை பிறை விடயத்தில் இதன் பிறகு ஏற்றுக் கொள்ளக் கூடாது. இதனால கடந்த காலங்களில் ஏற்பட்ட விளைவுகள் மிகவும் பாரதூரமானவை.