கொழும்பு தேசிய வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான பிரதான திட்ட வரைவு அண்மையில் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்கர் அனில் ஜயசிங்கவினால் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்தாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்பொருட்டு, பல நவீன வசதிகளுடனான கட்டடங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன் அதி நவீன வைத்திய உபகரண வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, 4,200 மில்லியன் ரூபா செலவில் 3வது வைத்திய விடுதிக் கட்டத்தொகுதியும், 18 மாடி வெளிநோயாளர் கட்டடம், 7 மாடி பல்சிகிச்சைப் பிரிவு, புதிய நரம்பியல் அறுவைச் சிகிக்சைக்கான வசதிகள் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வைத்திய சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் பல்வேறு தேவை கருதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படுவது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இதன் அபிவிருத்திப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர்; தெரிவித்துள்ளார்.
Post a Comment