அரசாங்கம், வடக்கில் ஏனைய சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்..!
(அபூ அஸ்ஜத் )
வடக்கு மாகாண சபையின் 2 வது அமர்வு நேற்று முன்தினம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாண ஆளுநரின் உரையாற்றும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள் அதனை பகிஷகரித்து வெளிநடப்பு செய்தது தொடர்பில் பெரும் விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியிலும் எற்பட்டுள்ளது.சபையின் தலைவராக அமர்ந்து இரண்டாவது அமர்வை ஆரம்பித்தவர் மாகாணத்தில் முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள்,இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாது,முரண்பட்டுக் கொண்டு வடக்கில் தமிழீழத்தையும்,பிரிவனைவாதத்தையும்,தாம் பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களை அரசாங்கத்தின் எதிரிகளாக கண்பிக்கும் வேலையினை மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் மூன்று உறுப்பினர்கள் செய்துள்ளதானது.பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் பிரச்சினைகளையும்,தேவைகளையும் பெரும் பான்மை சிங்கள அரசு என்று கூறும் மத்திய அரசாங்கத்தின் ஜனாதிபதியி்டம் இருந்து எதையும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று தேர்தல் காலங்களில் மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தி வடமாகாண சபையின் அதிகாரத்தை தந்தால் வடமாகாணத்தை சில மாதங்களில் ஏன் பதவியேற்றதும்,அனைத்தும் கொண்ட மாகாணமாக மாற்றுவதாக கூறிய இந்த கூட்டமைப்பின் சில அரசியல்வாதிகள் மீண்டும் அன்று புலிகளுடன் முகம் புதைத்து செய்து வந்த அதே காரியத்தை இன்று ஆரம்பித்துவிட்டார்கள் என்பது புலனாகின்றது.
சர்வதேசத்துக்கும்,அவர்களுக்கு நிதி வழங்கும் நிறுவனங்களுக்கும் தம்மை தமிழ் பேசும் மக்களை காட்டிக் கொடுத்து அரசியல் வியாபாரம் செய்யும் கூட்டமாக என்பதை காண்பித்து தமது அரசியல் அற்ப லாபங்களையும் பதவிகளையும் அப்பாவி தழிம் மக்களை ஏமாற்றி பெற்றுக் கொள்ளும் அரசியல் கலாசாரம் என்பது இந்த கூட்டமைப்பின் அரசியல் வாதிகளுக்கு புத்தானது அல்ல என்பதை யாவரும் அறிவர்.
வடக்கில் கடந்த 30 வருடகாலமாக தனி ஈழ கோறிக்கையினை முன் வைத்து பேராட்டம் என்ற பெயரில் அப்பாவி மக்களையும்,அவர்களது எதிர்காலத்தினையும் சூன்யமாக்கி பெறுமதி மிக்க இளைஞர் சமூகத்தினை அங்கவீனர்களாக்கிய அநியாயத்தை செய்தது மட்டுமல்லாமல்,அசையா சொத்துக்களையும் அழிவுக்குட்டபட்ட இந்த கூட்டத்தினர்,இந்த ஜனாதிபதி தலைமையிலனா அரசு செய்து வரும் மக்களின் பெரும் அபிவிருத்திகளுக்கு எதிராக மீண்டும் கிளர்ந் தெழுகின்ற துரோகத்தை செய்கின்றனர்.வடக்கில் அச்சமற்ற நிலையில் தமது அன்றாட வாழ்வினை முன்னெடுத்து செல்லும் எமது உறவுகளை காட்டிக் கொடுப்பு செய்யும் காரியங்களை தினந்தோறும் அரங்கேற்றிவருகின்றனர்.
இலங்கை மக்களின் எதிர்காலம் குறித்து பல் துறை அபிவிருத்தி இடம் பெறும் ஒரு சந்தரப்பம் தற்போது பொதுநலவாய நாடுகளின் இலங்கை மாநாட்டின் மூலம் கிடைக்கவுள்ள இந்த நிலையில் சர“வதேச நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிமைப்பட்டு இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அநியாயாம் இடம் பெறுவதாக பொய்யான வதந்திகளை தெரிவிக்கும் செயற்பாட்டின் வெளிப்பாடாகவே இந்த வடமாகாண சபையின் பகிஷ்கரிப்பு இடம் பெற்றுள்ளதை காணமுடிகின்றது.கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியினை கைப்பற்ற முடியாது போன நிலையில் வடக்கில் அவர்களது ஆட்சியினை தக்க வைத்துள்ளனர்.கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் மௌனம் சாதிக்கும் இக் கூட்டமைப்பினர் வடக்கில் ஏன் ஆளுநர் தொடர்பில் கர்ச்சிப்பதன் பின்னணி என்ன என்று ஆராய வேண்டிய தேவையுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு கடற்படை தளபதியாக இருந்தவர்.அவரும் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி,ஆனால் துரதிஷ்டம் கிழக்கிலிருந்து மீண்டும் தமது பிரிவினைவாத,இன எதிர் போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று பகற்கனவு கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த இலக்கை அடையமுடியாமல் போனதுடன்,அம்மாகாண மக்கள் வடக்கும்,கிழக்கும் இணைவதை அங்கீகரிக்கவில்லை.என்ற செய்தியினை தெளிவாக சொல்லியிருந்தனர்.இந்த நிலையில் கிழக்கின் ஆளுநரின் தலையினை தடவி தமது மக்களது தேவைகளை தமிழ் தேசிய கூட்டப்பின் கிழக்கு தலைமைத்துவமான இரா.சம்பந்தன் அவர்களது தலைமையிலான தமிழ் கூட்டமைப்பு செய்துவருகின்றது.இது தான் சரியான செயற்பாடு என்ற உண்மையினை அந்த மக்கள் நன்கு அறிந்து ஆணயைினை கிழக்கு தலைமைக்கு சொல்லியிருக்கின்றார்கள்.
ஆனால் வடக்கின் தலைமைத்துவம் என்பது சில ஆயுதக் குழுக்களின் அங்கம் பெற்றவர்களினால் நிர்வாகிக்கப்படுவதால் அவர்களது எதிர்பார்பபும் தேவையும் மீண்டும் மனித அழிவு என்பது தான் என்பதை தற்போதைய இவர்களது செயற்பாடுகளை காணமுடிக்கின்றது.குறிப்பாக வடக்கில் முஸ்லிம்,சிங்கள மக்கள் அவர்கள் ஏற்கனவே வாழ்ந்த கிராமங்களில் மீள்குடியேறவருகின்ற போது அவர்களை விரட்டும்,அதற்கெதிராக சதிகளை செய்யும்,பிழையான ஊடக அறிக்கைகளை வெளியிட்டு மக்களை முட்டாள்களாக மாற்றும் வேலையினை செய்வதன் மூலம் வடக்கு மாகாணம் தமிழ் இனத்துக்கு மட்டுமே உரியது என கூறுவதன் மூலம் இங்கிருக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் தொடக்கம் மாகாண மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை செய்துவருகின்றனர்.
வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி அவர்களை பொறுத்த வரை இவர் ஒரு உயர் இரானுவ பதவி நிலைய அதிகாரியாக இருந்தார்.இன்று அவர் வடமாகாண மக்களது நலனோம்பும் திட்டங்களை முன்னெடுக்கும் ஒருவராக மக்களுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டுவருகின்றார்.ஒரு இரானுவ உயர் அதிகாரி மக்களின் நலனக் திட்டங்களை முன்னெடுக்கும் இடத்தில் இருக்க முடியாது என்றால்,சட்ட விரோத ஆயுதங்களுடன் மக்களை கொன்று குவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவ்வாறு மக்கள் பிரதி நிதிகளாக இருக்க முடியும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.எது எவ்வாறாக இருந்த போதும்,வடமாகாண அளுநர் சந்திர சிறி அவர்கள் நல்ல மனித நேயம் கொண்ட ஒரு நிர்வாகி ஒரு இரானுவ அதிகாரி என்பதை விட அரசாங்கத்திலிருந்து சம்பளம் பெரும் அரச அதிகாரி என்பதை கூற வேண்டும்.அவரது இந்த காலத்தில் தான் தமிழ் மக்களது மீள்குடியேற்றம்,அபிவிருத்தி,மக்களது வாழ்வாதாரம்,தொழில் வாய்ப்பு,உள்ளிட் இன்னோரன்ன எத்தனையோ அபிவிருத்திகள் இடம் பெற்றுள்ளது.ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு மட்டும் இனங்கி வடமாகாண ஆளுநரை இந்த அரசாங்கம் பதவி நீ்க்கம் செய்யுமெனில்,இந்த அரசே தமிழீழத்தை உருவாக்கும் சக்திகளுக்கு வழி அமைத்து கொடுத்துவிட்டது என்ற அவப் பெயரை பெர நேரிடும்,எனவே ஏனைய சமூகங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் கடப்பாட்டினை கொண்டுள்ளது என்பதை மறந்து செயலாற்றலாகாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் எமது வடமாகாண மக்களது எதிர்பார்ப்பாகும்.
அபூ அஸ்ஜத்,
ReplyDeleteமுற்றும் முழுதான உண்மைகளை தெரிவித்துள்ளீர்கள்.அனைவரும் சிந்திக்க வேண்டியது.