Header Ads



அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறைப்போராட்டம்

(உமர் அலி  முகம்மதிஸ்மாயில்)

அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கமு  PSM ,துணை மருத்துவ சேவைகள்  அமைப்பும் சேர்ந்து இன்று  2011.11.01 வெள்ளிகிழமை நாடுமுழுதும்  ஒருநாள் சுகவீன வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

8 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த வேலை நிறுத்தத்தில்  சுகாதார  சேவைகள் திணைக்களத்தினால் தாதியர்களுக்கு  அவர்களது மேலதிக நேர சேவைக்கான கொடுப்பனவு அதிகரிப்பு,2007/07ஆம் இலக்க சுற்று நிருபத்தை இரத்துச்செய்தல்,,பொருள் பதிவேட்டுக்கான  கொடுப்பனவை அதிகரித்தல்,பட்டதாரி தாதியர்களினை ஆட்சேர்ப்பு செய்யும்போது  கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான சட்டங்களை தளர்த்துதல்,போன்ற எட்டம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த  வேலை நிறுத்தம் நடைபெறுகின்றது.

கொழும்பு  பெரியாஸ்பத்திரி ,கண்டி போதனா வைத்தியசாலை,காலி மாத்தறை, அநுராதபுரம் ,யாழ்ப்பாணம் போன்ற வைத்த்கியசளைகளும் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தைப்பொறுத்தவரை  அரச தாதிய உத்தியோகத்தர்களது கட்டுப்பாட்டில்தான் அதிகளவான வைத்தியசாலைகள்  இருக்கின்றன, மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலை,கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை,சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலை,அக்கரைப்பற்று தள வைத்தியசாலை,நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை,பொத்துவில் ஆதார வைத்தியசாலை,சாய்ந்தமருது  மாவட்ட வைத்தியசாலை,களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலை,வாளைச்சேனை , ஏறாவூர் போன்ற வைத்தியசாலைகளும் மிகவும் முழுமூச்சாக இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது,பணிமுடக்கம் செய்யப்பட்டுள்ள வைத்தியசாலைகளில்  அவசர சிகிச்சைகளிற்கு மட்டும் தாதியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்,

                               இலங்கையைப்பொறுத்தவரை வைத்திய பராமரிப்புத்துரையில் மிகவும் ஏற்றத்தாழ்வான சம்பள  வடிவமைப்பு காணப்படுகின்றது.20/30 வருடங்களுக்கு முன்னர்  இருந்த சில  கொடுப்பனவுகளே இன்னுமும் காணப்படுகின்றன.சுகாதார அமைச்சில் உயர் அதிகாரிகளாக டாக்டர்களே அதிகளவு பதவி வகிக்கின்றனர் இதனால்  அவர்கள் தமது துறைசார் குழுவை  முன்னிலைப்படுத்தியே முடிவுகளை எடுப்பதாக  அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவிக்கின்றது..

மட்டுமன்றி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு புதுமை தொன்று தொட்டு இலங்கையில் காணப்படுகின்றது.விரிவான ஒரு துறையான தாதியத்துறை  இருந்திட்டபோதிலும்  இலங்கையில் ஒரு குறிப்பிட அளவை விட வளர்ச்சியடையவில்லை.நாட்டுமக்கள் நவீனமயப்படுத்தப்படுத்தப்பட்ட தாதியர் சேவை மூலம்  பலன்பெறுவதை அரச வைத்தியர்கள் சங்கம் மறைமுகமாக  தலையீடு செய்து  முடக்குகின்றது.இதற்கு பல  நிரூபணங்கள் உள்ளன.

தாதியர்களின் கல்வி அபிவிருத்திப்பணிகளை தீர்மானிப்பவர்களாக தாதியர்களே இருக்க வேண்டும்.நாட்டு மக்களுக்கு எட்டமுடியாத தாதிய செயல்பாடுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றது இவற்றையெல்லாம்  தாண்டி முன்னேற்றம் காணாமல் இருப்பதற்கு பல்வேறுபட்ட  காரணிகள் இருக்கின்றன.இக்காரணிகளை அரசு இனம்கண்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன்  தாதியர்களையும் ஏனைய நாடுகள் போன்று கொடுப்பனவுகளிநூடாக கௌரவப்படுத்த வேண்டும் .

இலங்கையில் ஒரு தாதிய சங்கம் இருக்கின்றது அதற்கு தலைவர் தாதியத்திற்கு தொடர்பில்லாத ஒரு பௌத்த மதகுரு.,பௌத்த மத தர்மத்தை படித்த அவர் தாதியர்களது  பிரச்சனைகளை நூற்றுக்கு நூறுவீதம் எவ்வாறு  அறிந்து புரிந்து கொள்ளப்போகின்றார்?

இலங்கையில் தாதிய சேவை தலை நிமிர்ந்து தன்மானத்துடன் சுயநிர்ணயத்தை நிரூபிக்க வேண்டுமென்றால்  பிளவு பட்டுள்ள தாதியர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ்  ஒன்றுபட்டு தமது போராட்டத்தை  பொது மக்களுக்கு  பாதிப்பில்லாத வகையில்  நடத்த வேண்டும். அத்துடன் அரச வைத்திய சங்கம் தாதியர்களது கல்வி,பயிற்சி,சம்பள மாற்றங்கள் என்பன தமது சேவையை  பாதிக்காதபோழுது  அவற்றுக்கெதிரான நகர்வுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும்.

அதேபோல தாதியர்களும் நோயாளர்களுடன் கருணையாகவும் மனிதாபிமானமாகவும் நடந்து கொள்ளும்  அளவில் முன்னேற்றம் காண வேண்டும்.ஏனெனில் அரச தாதியசேவை மக்களை,நோயாளர்களை மையப்படுத்தியே உள்ளது.சேவை மக்களுக்கானதே தவிர அதிகாரிகளுக்கானதல்ல.

No comments

Powered by Blogger.