முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கல்முனை மேயர் சிராஸ் இடைநிறுத்தம் - ரவூப் ஹக்கிம் சற்று முன் அறிவிப்பு
(இப்னு செய்யத்)
முஸ்லிம் காங்கிரஸில் இருந்து கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிவுவினை இடைநிறுத்தி வைத்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
மேயர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கு அவருக்கு ஒரு வாரகாலம் அவகாசம் வழங்கி இருந்த நிலையில், சிராஸ் மீராசாஹிவு கட்சிக்கும், தலைமைக்கும் சவால்விடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தமையால் அவர் கட்சியில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, இதற்குப் பிறகு அவர் முஸ்லிம் காங்கிரஸின் மேயராக இருப்பதற்கான தகுதியையும் இழந்துள்ளார் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம் தெரிவித்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள இவருடன் தொடர்புகளை வைத்துக் கொண்டு கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் அவருடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, அவரோடு இணைந்து கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக செயற்படுவார்களாயின் சிராஸ் மீராசாஹிவுவை கட்சியில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்னதாக அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment