சிரியா மீது சட்டவிரோத இஸ்ரேல் ஆக்கிரமிப்பு விமானத் தாக்குதல்
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரசாயன ஆயதங்கள் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 1400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த செயல் ஐ.நா சபையின் கண்டனத்திற்கு உள்ளானது. இதனையடுத்து சிரியாவின் ரசாயன ஆயுதங்களை 2014-ம் ஆண்டு மத்திக்குள் அழிக்கும் பணி தொடங்கியுள்ளது.
சர்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பினர் இந்தப் பணியை நிறைவேற்றி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இஸ்ரேல் சிரியாவின் லடாகியா மாகாணத்தில் உள்ள போர் விமானதளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவித்தன.
லெபனானில் உள்ள ஷியா பிரிவு இயக்கத்தினரான ஹெஸ்பொல்லா தீவிரவாதிகளுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏவுகணை சரக்குகள் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. தாக்குதல் நடைபெற்றதை உறுதி செய்த அமெரிக்க அதிகாரி ஒருவர் மற்ற விபரங்களைக் கூற மறுத்துவிட்டார்.
இஸ்ரேலிய அதிகாரிகளும் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் இணைந்துள்ள ஹெஸ்பொல்லா இயக்கத்திருக்கான ஏவுகணைகளே இந்தத் தாக்குதலின் இலக்காக இருந்தது என்று மட்டும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
Post a Comment