பல அத்துமீறல்கள் முஸ்லிம்களாலும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ளது
வடக்கில் இருந்து முஸ்லீம்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டமை இனச் சுத்தீகரிப்பு இதனை மறுக்க முடியாது என கனடாவில் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முழுமையாக காணொளியை பாருங்கள் , கேளுங்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteதயவு செய்து மதிப்புக்குரிய திருவாளர் சுமந்திரன் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை கவனமாக கேளுங்கள் ( 7:22 நிமி ஆரம்பிக்கிறது ) அவர் புலிகள் முஸ்லிம்களை வடமாகாணத்தில் இருந்து விரட்டியதை தவறானது என்ற கருத்துபடவே கூறுகிறார் அதே நேரம் கிழக்கு மாகாணத்தில் இரு இனங்களும் தவறு செய்துள்ளார்கள் என்று தான் சொல்லுகிறார்.
ReplyDeleteஇந்த செய்தி வாசகர்களை பிழையாக வழிநடத்துகிறது. நாம் முஸ்லிமாக இருந்து கொண்டு இப்படி ஒரு அபாண்டமான பின்னூட்டல்களை எழுதுவது ஒரு முன்மாதிரியான விடயமல்ல.
திரு. சுமந்திரன் அவர்களே, உங்களது பேச்சை தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள் அதற்காக நான் மிகவும் மனம் வருந்துகிறேன். அதே நேரம் ஜப்னா முஸ்லிம் இப்படியான பொறுப்பற்ற விதமாக நடக்காது என நம்புகிறேன்.
சகோதரர்களே.!
ReplyDeleteஇந்த செய்தியைப் பார்த்த நேரம் நானும்தான் பாரிய அதிர்ச்சியடைந்தேன்.
இவ்வளவு தூரம் மிகத் தெளிவான விடயத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளுக்கு வந்து விடுகின்ற ஏமாளித்தனத்தில் நமது முஸ்லிம் சமூகம் இன்னமும் இருக்கிறது என்பதுதான் எனது அதிர்ச்சிக்குக் காரணமாகும்.
மாறாக சுமந்திரன் தெரிவித்ததாக இங்கு பிழையாகத் தெரிவிக்கப்படடுள்ள செய்தியோ அல்லது அதனை வைத்துக் கூறப்பட்ட கருத்துக்களோ அல்ல.
இந்தக் காணொளியினை மிகக் கவனமாகக் கேட்டால் சுமந்திரன் எங்கும் முஸ்லிம்கள் பாரிய தவறுகளை முஸ்லிம்கள் தமிழர்கள் விடயத்தில் செய்ததாக சொல்லவில்லை.
'வட கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு முஸ்லிம்களின் நலன் சார்ந்த வேறொரு நியாயம் இருக்கிறது' எனக் கனடா கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கருத்துத் தெரிவித்த வேளைதான் அதனை பலமாக மறுத்து சுமந்திரன் இங்கு வாதாடுகிறார்.
யுத்த சூழ்நிலையில் முஸ்லிம்கள் தரப்பிலும் பல அத்து மீறல்கள் நடந்திருக்கிறது. அதே வேளை தமிழர்கள் தரப்பிலும் பல அத்து மீறல்கள் நடந்திருக்கின்றன என்ற யதார்த்தத்தை ஞாபகப்படுத்தும் சுமந்திரன் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையினை இந்த அத்து மீறல்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாதென்றும் அது மிக அநியாயமான இன சுத்திகரிப்பே என்றும் இறுதிவரை வாதாடுகின்றார்.
இங்கு சொல்லப்பட்டிருப்பது போல புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்துவதற்காக இதனை அவர் கூறவில்லை என்பதனை இக்காணொளியினை முழுமையாகப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
ஏனென்றால் அவர் தனது கருத்துரையில் இறுதியாக வட மாகாண முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டது மோசமான அநிதியே; என்கின்ற தனது நிலைப்பாட்டை எங்கும் எடுத்துரைக்கவே செய்வேன் என்றும் இதனை புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனது MP பதவியை இராஜினாமாச் செய்து விட்டு போவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்;;.
இவ்வளவு தூரம் தெட்டத் தெளிவாக முஸ்லிம்களுக்காக கனடாவில் வைத்து சுமந்திரன் பேசியிருக்கின்ற போது ஏன் இதனை திரிவு படுத்தும் வகையில் தலைப்பிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டது என்பது எனக்கு அதனைவிட ஆச்சர்யமாக இருக்கிறது.
இந்தக் காணொளியைப் பார்க்கும் போது தமது அரசியலுக்குப் பக்கபலமாக இருக்கும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்திற்காக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் சுமந்திரன் பற்றிய மரியாதை எனக்குப் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
மனச்சாட்சியும் நீதமும் உள்ள அத்தனை பேருமே என்னைப்போன்றே உணர்வார்கள்.
தயவு செய்து முஸ்லிம்கள் அத்தனை பேரும் ஒரு 23 நிமிட நேரம் செலவழித்து இந்தக் காணொளியை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டு கோளாகும்.