அநுராதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகள் (படங்கள் இணைப்பு)
அநுராதபுரத்தில் அண்மையில் 5 பேரை படுகொலை செய்தவனை கைதுசெய்துயுள்ள பொலிஸார் அவரினடம் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கொலையாளியுடன் படுகொலையுண்டவர்களின் உடல்களையும், அவர்களின் உடல்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதையும் இங்கு காண்கிறீர்கள்.
அனுராதபுரம் விஹார ஹல்மில்லகுளம் பிரதேசத்தில் 05 போரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 05 பேரை கொலை செய்த சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் 08-11-2013 இன்று நீதிமன்றத்தில் பொலிஸாரினால் ஆஜர்ப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதவான் ருவாந்திகா மாரப்பன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன் போது, குறித்து கொலை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சந்தர்ப்பமளிக்குமாறு சந்தேக நபர் நீதின்றத்தில் கோரிக்கை விடுத்தார் இதனையடுத்து எதிர்வரும் 11ம் திகதி வாக்குமூலம் வழங்க நீதிமன்றம் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கியது.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அனுராதபுரம் தலைமையக பொலிஸார், சந்தேக நபர் வேறு குற்றங்கள் எதிலும் சம்பந்தப்பட்டுள்ளாரா என்பது பற்றி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

better no need Waite want to kill him.
ReplyDelete