சமாதான நீதவான்
அம்பாரை மாவட்டம், அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு 1ம் பிரிவைச் சேர்ந்த மௌலவி ஆதம்லெப்பை றினோஸ் மின்ஹாஜி அவர்கள் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் தொழிநுட்ப ஆசிரியர் பயிற்சியை முடித்த இவர் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் ஆசிரியராக சேவையாற்றி வருகின்றார்.
அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாலயம், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யிலும் கற்று, சன்மார்க்கக் கல்வியை அக்கரைப்பற்று மன்பஉல் கைறாத் அறபுக்கல்லூரி, கண்டி - படுபிட்டிய மின்ஹாஜியா அறபுக்கல்லூரி ஆகியவற்றிலும் கற்றவர்.
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பேஷ் இமாமாக சேவை புரிந்த இவர் சிறந்த சமூக நலப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலின் கௌரவ செயலாளர் அல்ஹாஜ் ரீ.எஸ்.ஆதம்லெப்வை ஜே.பி - கே.எம். ஸைனப் ஆகியோரின் கனிஷ்ட புதல்வராவார்.
சமாதான நீதவானாக தெரிவுசெய்யப்ட்டத்கு வாழ்துக்கள் .ஆனால்,பதவியை பெற்றுத்தந்த அரசியல்வாதி நம்ஊருக்கு வரும்போதம் போகும்போதும் விழுந்து விழுந்து சாட்டாங்கு செய்யணும் வேணாண்டு போய்விடும்.
ReplyDelete