ஐக்கிய அரபு இராச்சியத்தின் அதிரடி தீர்மானம் -
(tn) தனிநபர்களின் அனுமதியின்றி அவர்களின் புகைப்படத்தை இணைய தளத்தில் பதிவேற்றுவது சிறை தண்டனைக்குரிய குற்றம் என சமூக இணையதள பயனாளர்களை ஐக்கிய அரபு இராச்சிய நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இவ்வாறு ஒருவரது அனுமதி இன்றி அவரது புகைப்படம் அல்லது வீடியோவை பதவேற்றுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் (140,000 டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும் என்று அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி அல் இத்திஹாத் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இணையதள கட்டுப்பாடுகள் கடுமையாக உள்ள பிராந்திய நாடுகளில் ஐக்கிய அரபு இராச்சியமும் ஒன்றாகும். இந்நிலையில் உள்துதறை அமைச்சின் அதிகாரி லுதினன் கொலனல் சலாஹ் அல் கவுல்லை மேற்கோள் காட்டியே அல் இத்திஹாத் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சட்டம் சமூக இணையதளம் அல்லது அனைத்து தகவல் தொர்பு வலையமைப்புகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய தொழிலாளர் ஒருவரை ஐக்கிய அரபு இராச்சிய பிரஜை ஒருவர் தாக்கும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்ட நபரை டுபாய் பொலிஸார் கடந்த ஜுலையில் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment