Header Ads



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புதிய நடைமுறை - ஜனாஸாக்களை பெறுவதில் சிக்கல்


பணிப்பாளர்                          
போதனா வைத்தியசாலை               
மட்டக்களப்பு 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையும் உள்ள பல இனங்களைச் சேர்ந்த நோயாளர்கள் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிலர் சிகிச்சை பெற்று சுகமடைந்து வீடு செல்கின்றனர் சிலர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையிலே மரணித்தும் விடுகின்றனர்.

     அவ்வாறு மரணிக்கும் பிரேதங்களை அவர்களின் இறுதிக் கடமைக்காக உறவினர்களிடம் அப்போது கடமையிலிருக்கும் வைத்தயர்களே ஒப்பம் இட்டு வழங்கி வந்துள்ளனர்.

     கடந்த இரண்டு வாரங்களாக அந்நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்;பட்டு பிரேதங்களை உறவினர்களிடம் கையளிக்கப்படுவதற்கு முன்னர் பணிப்பாளர்களில் எவரேனும் ஒருவர் பரிசோதனை செய்து ஒப்பமிட்டு மாலை 5.00 மணி வரையுமே வழங்குவதாகவும் மாலை 5.00 மணிக்குப் பின்னர் மறுநாள் காலை 8.00 மணிக்குப் பின்னரே பிரேதங்களை பெற்றுக் கொள்ள முடியும் என  அறிய முடிகின்றது

   இக்குறித்த நடைமுறை சிறந்த நிருவாக செயற்பாடாக இருப்பினும் பிரேதங்களை உரியவர்கள் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர் நோர்க்கியும் எதிர் நோர்க்கவும் ஏற்படும் ஒவ்வொரு மதத்தவர்களும் தங்களது மத அடிப்படையில் பிரேதங்களை நல்லடக்கம் செய்து வழக்கம்.

   அந்த அடிப்படையில் இஸ்லாமியர் ஒருவர் மரணித்து விட்டால் குறித்த ஓரிரு மணித்தியாலங்களில் அவரது உடலின் உஸ்னம் குறைவதற்கு முன்னர் நல்லடக்கம் செய்கின்றனர். அதனை தாங்களும் அறிவீர்கள் அவ்வாறிருக்க குறித்த நடைமுறையினால் எதிர் காலத்தில் இஸ்லாமியர்கள் தங்களது உறவினர்களின் ஜனாஸாக்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோர்க்க நேரிடும்

    எனவே குறித்த நடைமுறையை மாற்றம் செய்து வழமைபோன்று அப்போது கடமையில் இருக்கும் வைத்தியர் கையப்பம் இட்டு பிரேதங்களை வழங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் செய்ய முடியா விட்டால் தற்காலம் போதனா வைத்தியசாலையில் கடமையிலிருக்கும் மூன்று பணிப்பாளர்களும் தினமும் சுழற்சி முறையில் கடமையில் இருந்து வைத்தியசாலையில் மரணிக்கும் பிரேதங்களை உறவினர்களிடம் கையளித்து அவர்களது மத கலாச்சாரங்களின் அடிப்படையில் குறித்த கால நேரத்தில் நல்லடக்கம் செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்

இவ்வண்ணம்

............................
NK றம்ழான் 
போதனா வைத்தியசாலைக் குழு மட்டக்களப்பு

No comments

Powered by Blogger.