90 சதவீதமான இந்தியர்கள் மோடியை எதிர்க்கின்றனர் - ஜாவேத் அக்தர்
(Inne) 90 சத இந்தியர்கள் குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை எதிர்க்கின்றனர் என்று பாலிவுட் பாடலாசிரியரும், கவிஞருமான ஜாவேத் அக்தர் கூறியுள்ளார். ட்விட்டர் சமூக தளத்தில் இக்கருத்தை ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த மாதம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜாவேத் அக்தர், "மோடி ஒருபோதும் நல்ல பிரதமராக இருக்க முடியாது" என்று கூறியிருந்தார். மோடி ஆதரவாளர்களிடமிருந்து ஜாவேத் அக்தரின் இந்தக் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "மோடியை எதிர்ப்பது தேசவிரோதச் செயல் என்று சில முட்டாள்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் 90 சதவிகித மக்களும் மோடியை எதிர்க்கவே செய்கின்றனர். அப்படியானால், 90 சதவிகித மக்களும் தேச விரோதிகள் என்று இந்த முட்டாள்கள் கருதுகின்றனரா?" என்று ஜாவேத் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 'நாகரிகமற்ற, தரக்குறைவான கருத்துகளை எனக்கெதிராக மோடி ஆதரவாளர்கள் எழுதுகிறார்கள்; இது அவர்களின் தரத்தையே காட்டுகிறது' என்றும் ஜாவேத் அக்தர் கூறியுள்ளார்.
Post a Comment