Header Ads



80 லட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மன்னாரில் மீட்பு

மன்னார் செளத்பார் கடற்கரைப்பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை காலை 80 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை மன்னார் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். 

மன்னார் பொலிஸாருக்கு நேற்று காலை கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்சிறி விஜயசேன தலைமையிலான போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் செளத்பார் கடற் கரைப்பகுதிக்குச் சென்று 19 பொதிகளைக் கொண்ட 40 கிலோ கிராம் கேரள கஞ்சாப் பொதியை மீட்டுள்ளனர். இதன் போது அங்கிருந்த இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதோடு கஞ்சாவை ஏற்றிச் செல்வதற்காக வைத்திருந்த ஓட்டோ ஒன்றையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

1 comment:

  1. காத்தான்குடியில் 135 கிராம் கஞ்சா கைப்பற்றப் பட்டதாகக் கூறி பத்திரிகையாளர் புவி ரஹ்மாதுல்லாஹ்வை கைது செய்தனர்.

    மன்னாரில் 40 கிலோ கஞ்சா என்பதால், பெரிய புள்ளிகள் யாரையாவது கைது செய்ய திட்டங்கள் உள்ளதோ தெரியவில்லை.

    ReplyDelete

Powered by Blogger.