கல்முனை ஸாஹிரா கல்லூரியிலிருந்து 78 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி
(ஹம்தி ஜெஸ்மின்)
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிக்கமைய கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியிலிருந்து பொறியியல் துறைக்கு எண்மர் உட்பட 78 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப்பரீட்சையில் சிறந்த சித்திகளைப் பெற்ற இக்கல்லூரி மாணவர்கள் இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள பல்கலைக் கழகங்களுக்கு பல்வேஞ பீடங்களுக்கும் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்லூரி பதில் அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஹம்ஸா தெரிவித்தார்.
இதன்படி பொறியியல் துறைக்கு 08 பேரும் , மருத்துவத்துறைக்கு 02 பேரும் , நிலஅளவை மற்றும் கணினி விஞ்ஞானப்பிரிவிற்கு முறையே இருவரும் , பௌதீக விஞ்ஞானத்துறைக்கு 29 பேரும் , விவசாயத்துறைக்கு ஐவரும் , உயிரியல் விஞ்ஞானத்துறைக்கு 15 பேரும் , முகாமைத்துவத்திற்கு இருவரும் , வர்த்தகத்துறைக்கு 04 பேரும் ஏனையோர் கலைத்துறைக்கும் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுள் வருடா வருடம் அதிகளவு மாணவர்களை தொடர்ச்சியாக பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிவரும் இக்கல்லூரியில் இவ்வருடம் முதல் உயர்தர வகுப்பில் தொழில்நுட்ப பிரிவொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனைத் தொகுதியில் இக்கல்லூரியில் மட்டும் இக்கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் தமிழ் மாணவர்களும் கணசமான அளவு இக்கல்லூரியில் இணை்ந்து கல்வி பயில்கின்றனர்.
பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் ,பகுதித்தலைவர்கள் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் , பழைய மாணவர் சங்கம் , பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை , பாடசாலை அபிவிருத்திக்குழு மற்றும் கல்லூரியின் மகாசபை என்பன பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளன.
Post a Comment