பாலஸ்தீனத்திற்கு 75 மில்லியன் டாலர் நிதி உதவி: அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி மத்தியக் கிழக்கு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவை இன்று சந்தித்த பின்னர் பாலஸ்தீனம் சென்று அங்கு பெத்லஹெம் நகரில் பாலஸ்தீனியத் தலைவர் மகமூத் அப்பாஸையும் கெர்ரி சந்தித்தார். அப்போது அமெரிக்க அரசு பாலஸ்தீனத்திற்கு மேலும் 75 மில்லியன் டாலர் நிதி உதவி செய்வதாக அவர் அறிவித்தார்.
இந்த உதவியானது பாலஸ்தீன நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும்,பள்ளிகள், சாலைகள் போன்றவற்றை செப்பனிடுவதற்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டில் திட்டமிடப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளுக்கான 100 மில்லியன் டாலர் திட்ட மதிப்பிட்டில் அமெரிக்காவின் பங்களிப்பாக இந்தத் தொகை அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில்,இஸ்ரேலும், பாலஸ்தீனமும் மேற்கொண்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னறுவது அந்நாட்டிற்கு அளிக்கும் அளவில்லாப் பலன்களை பாலஸ்தீனியர்கள் உணருவதற்காகவே இந்த உதவிகள் செய்யப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பாலஸ்தீனத்தின் ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகின்றது.
Post a Comment