இலங்கை சிறைகளில் பெண்கள் நிலை மோசம், 75 பேருக்கு ஒரு மலசலகூடம்
இலங்கையின் சிறைச்சாலைகளில் எலிகளின் தொந்தரவும் பாய் மற்றும் தலையணைகளுக்கான தட்டுப்பாடும் காணப்படும் அதவேளை, மிக மோசமான வெப்பநிலையுள்ள காலப்பகுதியில் கூட சிறைக்கைதிகளின் வசதி கருதி மின்விசிறி கூட சிறைசாலைகளில் காணப்படுவதில்லையென பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமையத்தின் விசேட அறிக்கையாளர் ரஷிடா மன்ஜோ தெரிவித்துள்ளார்.
வாசம் அனுபவித்துவரும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அவர்களின் நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ரஷிடா மன்ஜோவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் அமையத்தின் கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டது.
ரஷிடா மான்ஜோவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை சிறைகளில் கைதிகளாகவுள்ள பெண்களுக்கு அவர்களின் சிறைக்கூடங்களில் இரண்டு கழிவறைகள் மட்டுமே காணப்படுவதுடன் , ஒரு கழிவறையை 75 க்கும் அதிகமான பெண் கைதிகள் பகிர வேண்டிய அவல நிலையுள்ளது. அத்துடன் 75 பேர் தங்கக் கூடிய வசதியினைக் கொண்ட சிறை கூடமொன்றில் 150 க்கும் அதிகமான பெண் கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். குற்றச் செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக சிறைவாசம் அனுபவிக்கும் பெண்களின் வீதம் ஆண்களுக்கு இணையாக அதிகரித்துள்ளதுடன் பல்வேறு நாடுகள் அதற்கான சான்றாகவும் விளங்குகின்றது. உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் போதை பொருள் தடுப்பு கொள்கைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதுடன் இதனால் பெண் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Post a Comment