Header Ads



இரண்டரை இலட்சம் ரூபாவுக்காக 5 பேரை படுகொலை செய்தவன் - அநுராதபுரத்தில் நடந்தது

(Tm) அநுராதபுரம், ஹல்மில்லகுளம எனுமிடத்தில் இடம்பெற்ற ஐவர் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலங்கள் மீட்கப்பட்ட 12 மணிநேரத்திற்கு பின்னர் ஹசலக்கையில் வைத்து சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டார்.

ஐந்து கொலைகளின் சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரரான ஜகத் குமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில், ஹசலக்கையில் காணியொன்றை விற்பனை செய்துவிட்டு பணத்துடன் வந்தவர்கள் ஐவரையும் நடுநிசியில் வைத்து வீச்சு கத்தியால் வெட்டிக்கொன்றேன்.

அதன்பின்னர் சுமார் இரண்டரை இலட்சம் ரூபாவை களவெடுத்துகொண்டு இலைக்கஞ்சியும்  குடித்துவிட்டு பஸ்ஸொன்றில் ஹசலக்கவும் சென்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்யும் போது அவர் 85 ஆயிரம் ரூபாவை செலவழித்து தங்க சங்கிலியொன்றையும்  கை சங்கிலியொன்றையும் கொள்வனவு செய்திருந்ததாகவும் மீதமாக ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ரூபா மீதம் இருந்ததுள்ளது.

கொலைகளுக்கு பின்னர் சந்தேகநபர் மதுபானம் அருந்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் தனது வாக்குமூலத்தில்,

தனது நண்பனான பிரியந்தவுடன் அவரது வீட்டில் வைத்து அன்றிரவு மது அருந்தினேன். அதன்பின்னர் முதலில் நண்பனின் தாயை கொலைசெய்தேன். அம்மாவை கொலை செய்வதை நண்பன் கண்டுவிட்டான்.

அதன்பின்னர் நண்பனை கொலை செய்த வீட்டிலிருந்த ஏனையோர் அஞ்சியதையடுத்தே இந்த சம்பவம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த ஐவரையும் கொலை செய்தேன் என்றும் தனது சாட்சியத்தில்  தெரிவித்துள்ளார்.

ஐவரையும் கொலை செய்ததன் பின்னர் நண்பனின் உடையை உடுத்திக்கொண்டு நண்பனின் சைக்கிளில் சிறிது தூரம் வந்து சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு பின்னர் பஸ்ஸில் ஏறி ஹசலக்கவிற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிக்கான தவனைக்கட்டணத்தை செலுத்தவே ஐவரையும் தான் படுகொலை செய்ததாகவும் அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இந்த கொடூர அரக்கனுக்கு ஐநூறு வருடங்கள் சிறை தண்டனை கொடுத்தாலும் போதாது. பொது மைதானத்தில் வைத்து மக்கள் முன்னிலையில் இவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. Brother, we can punish him only once in this world. Thats why Allah has kept a day of judgement to punish all the human beings that to give justice.

      Delete
  2. இவனயெல்லாம் நாய சுா்ர மாதிரி சுட்டு தள்ளனும்...பண்ணி..

    ReplyDelete
  3. pothuwana idaththula iwanukku marana thandanai kodukkanum awan waayalaye kutraththai oththukkonddan ini enna wisaranai marana thandanayai nirai wetra wendiyathuthan .

    ReplyDelete

Powered by Blogger.