இலங்கையில் நல்ல ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர் - செனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே
போராட்டங்களைக் கண்டு சோர்ந்து போகப் போவதில்லை என செனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார். தடைகள் மற்றும் போராட்டங்களை கடந்து வடக்கு நிலைமைகள் பற்றிய செய்திகள் அறிக்கையிடப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கலம் மக்ரே குழுவினர் ரயில் மூலம் வடக்கிற்கு பயணம் செய்த போது அனுராதபுரத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால், அனுராதபுரத்துடன் மக்ரே குழுவினர் நாடு திரும்பியிருந்தனர்.
தடைகளைக் கருத்திற் கொள்ளாது தமது பணிகளை தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தங்கள் வவுனியாவிற்கு ரயில் மூலம் பயணம் செய்கின்ற விபரம் எவ்வாறு போராட்டம் நடத்தியோருக்கு தெரிந்தது என்பது பற்றி அரசாங்கத்திடம் விளக்கம் கோரத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்ல ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் சுயாதீனமாக இயங்க முயற்சிக்க வேண்டுமெனவும் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்.
I wish he should also visit the Muslims to know, What LTTE did for other communities.
ReplyDeleteSorry, This is only applicable... IF HE IS NOT A BIASED REPORTER