Header Ads



ஜனாதிபதி மஹிந்தவுக்கு அருகில் செனல் 4 ஊடகவியலாளர்கள் எப்படி சென்றார்கள் - விசாரணை ஆரம்பம்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அருகில் பிரித்தானிய செனல் 4 ஊடகவியலாளர்கள் சென்றது எப்படி என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இது குறித்து விசாரணை நடத்துமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

நேற்றைய தினம் பொதுநலவாய மாநாட்டு வர்த்தக பேரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவிற்கு அருகில் சென்ற செனல் 4 ஊடகவியலாளர் தன்னை அவரிடம் அறிமுகம் செய்து போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து பொருட்படுத்தவில்லை என கூறினார். 

மேலும் செனல் 4 ஊடகவியலாளரை தேனீர் அருந்து வரும்படியும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.  மாநாடு அரங்கை விட்டு ஜனாதிபதி வெளியில் வந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றது. 


No comments

Powered by Blogger.