சனல் 4 ஊடகவியலாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்க, முட்டாள் அலோசகர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை
சனல் 4 ஊடகத்தின் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவை நாட்டுக்குள் அனுமதித்தமை அரசாங்கத்தின் முட்டாள்தனமான தீர்மானம் என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மக்ரேவை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு அரசாங்கத்தின் முட்டாள் அலோசகர்கள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஒட்டுமொத்த தேசத்தையும் காட்டிக் கொடுத்துள்ளார். வங்குரோத்து அடைந்துள்ள மக்களினால் நிராகரிக்கப்பட்டு வரும் அரசியல்வாதிகள் டொலர்களுக்காக சனல்4 ஊடகவியலாளர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.
சிரேஸ்ட தலைவர்களை உருவாக்கிய சிறிகொத்தவில் நாட்டுக்கு எதிரான சூழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் பிரிவினைவாதத்தை போசித்து வருகின்றன என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Post a Comment