Header Ads



சவூதி அரேபியாவில் 48 மணி நேரத்திற்குள் 16,000 வெளிநாட்டினர் கைது

சவூதி ஆரேபியாவில் சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தேடுதல் வேட்டையில் கடந்த 48 மணி நேரத்திற்குள் 16,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக சவூதி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது எத்தியோப்பிய நாட்டு குடியேற்றவாசி ஒருவர் சவுதி பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றபோதே அவர் கொல்லப்பட்டதாக ரியாத் பொலிஸ் பிரதானி நாஸர் அல் கஹதானி குறிப்பிட்டுள்ளார். இதில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத தொழிலாளர்களில் பாதியளவானோர் யெமன் எல்லைப் பகுதியில் வைத்து பிடிபட்டிருப்பதோடு, மக்கா யாத்திரை முடிந்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த சுமார் 5000 பேர் மக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

தவிர ரியாதின் பிரதான நகரில் 1000 க்கும் குறைவானவர்கள் சிக்கியதாக சவூதி அதிகாரியை மேற்கோள் காட்டி அந்நாட்டின் அஷ்ரக் அல் அவ்ஸத் பத்திரிகை புதன்கிழமை செய்தி வெளியிட்டது. சந்தை பகுதி, கடைகள், கட்டுமான தளங்கள், விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களை பொலிஸார் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொழுகை முடிந்து வருவோரை இடை மறிந்து விசாரித்து கைது செய்யப்படுவதாகவும் மேற்படி பத்திரிகை குறிப்பிட்டது.

No comments

Powered by Blogger.