இலங்கையில் 4.2 மில்லியன் வாகனங்கள் பாவனையிலுள்ளன.
(எம்.எம்.ஏ.ஸமட்)
கொழும்பு நகரின் சுற்றுச் சூழல் மாசடைவதற்கு வாகனப் போக்குவரத்தே பிரதான காரணமென சுற்றாடல்துறை அமைச்சர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற எரிபொருள் பாவனையும் சுற்றாடல் முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
சுற்றாடல் மாசுபடாமல் பாதுகாப்பதற்கு சுற்றாடல் முகாமைத்துவம் முக்கியமானது. சுத்தமான எரிபொருள் பாவனையினூடாக இலங்கையின் வளிமண்டலம் மாசுடுபது தடுக்கப்படுவது மாத்திரமின்றி அதன் தரத்தையும் பேணமுடியும்.
ஏனைய தெற்காசி நாடுகளைப் பார்க்கிலும் இலங்கை சுகாதாரத்திற்கும் சுற்றாடல் பாதுகாப்புக்கும் முன்னுரிமை வழங்கும் நாடாக விளங்குகிறது.
கடந்த 2 தாசப்த காலங்களில் இலங்கையில் வானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொது 4.2 மில்லியன் வாகனங்கள் பாவனையிலுள்ளன.
வாகன உரிமையாளர்கள் வாகனங்களின் பாவனைத் தரம் தொடர்பிலும் பயன்படுத்தும் எரிபொருள் தொடர்பிலும் அதிக அக்கரை செலுத்த வேண்மெனெவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Post a Comment