விற்றமின் மாத்திரைகளை உட்கொண்ட 34 மாணவர்களுக்கு ஒவ்வாமை - வைத்தியசாலையில் சிகிச்சை
விற்றமின் மாத்திரைகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களில் 34 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இறக்குவானை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 34 மாணவர்களே இவ்வாறு வீடு திரும்பியுள்ளனர்.
மாத்திரைகள் ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மேலும் 6 மாணவர்கள் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுகாதார வேலைத் திட்டமொன்றுக்கு அமைய இன்று காலை 9 மணி அளவில் இந்த மாணவர்களுக்கு விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விற்றமின் மாத்திரைகள் வழங்கப்பட்டதன் பின்னர் வாந்தி, வயிற்றுளைவு, மயக்கம் போன்ற நோய் அறிகுறிகள் மாணவர்களிடம் தென்பட்டதை அடுத்து அவர்கள் இறக்குவானை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தரம் ஒன்று மற்றும் இரண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கே விற்றமின் மாத்திரை வழங்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர் கூறியுள்ளார்.
Post a Comment