இலங்கையின் சனத்தொகையில் 25 வீதமானோருக்கு நீரிழிவு
இந்த வருடம் 'நீரிழிவு நோயிலிருந்து எமது எதிர்கால சந்ததியை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் நீரிழிவு தினம் கொண்டாடப்படவுள்ளது. தற்போது இலங்கை சனத்தொகையில் 25 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2050 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் உலக சனத்தொகையில் 200 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சுசுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு வீதமானவர்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 10 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் பொருத்தமற்ற உணவுப் பழக்கவழக்கமே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி,உயரத்திற்கேற்ற பருமன் ,சீனி மற்றும் மாப்பொருள் பாவனையை குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment