Header Ads



199 வது டெஸ்ட் போட்டியில் சச்சின் 10 ஓட்டங்களுடன் அவுட் - நடுவரின் தவறான முடிவா காரணம்..?

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்  மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி கொல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முரளி விஜய் 16 ஓட்டங்களுடனும், தவான் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணிக்கு ஷிகர் தவான்(23) நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய்(26) ஷில்லிங்போர்டு 'சுழலில்' சிக்கினார்.

தொடர்ந்து 199ஆவது டெஸ்டில் களமிறங்கிய சச்சின்(10) ஏமாற்றினார். புஜாரா(17), கோஹ்லி(3) நிலைக்கவில்லை.

தெண்டுல்கர் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு நடந்து வந்துபோது ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பினர். ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவரை கைதட்டி வரவேற்றனர்.

199–வது டெஸ்டில் விளையாடும் அவர் தான் சந்தித்த 3–வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தெண்டுல்கர் 10 ரன்னில் இருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். ஆனால் அவரது அவுட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெலிவிசன் ரீபிளேயில் பார்த்தபோது மிகவும் மேலாக செல்வது தெரிந்தது. அதாவது ஸ்டம்புக்கு மேலே செல்லக்கூடிய பந்துக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

இங்கிலாந்து நடுவர் லாங் இந்த தவறான முடிவை எடுத்து அவுட் கொடுத்தார். நடுவரின் இந்த மோசமான முடிவால் தெண்டுல்கர் ஏமாற்றம் அடைந்தார். அதோடு ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர். அவரது ஆட்டத்தை காண ஈடன்கார்டன் மைதானத்துக்கு இன்று ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர்.

1 comment:

  1. நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரிவீவ் DRS ஐ இந்தியா மட்டும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றது. தமது நடுவர்களை வைத்து செய்யும் தில்லுமுல்லுகள் வெளிப்பாட கூடாது என்பது அவர்களது நோக்கமாக இருக்கலாம்.

    இந்தியர்கள் வெட்டிய குழியில் சச்சின் விழுந்துள்ளார், அவளவுதான். நடுவரைக் குறை சொல்லுவதில் தப்பில்லை.

    ReplyDelete

Powered by Blogger.