Header Ads



பங்களாதேஷில் 150 இராணுவ வீரர்களுக்கு மரணதண்டனை

கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறைந்தது 150 இராணுவ வீரர்களுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை விதித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு உயிர்ப்பலி ஏற்பட்ட எல்லைப் பாதுகாப்பு படையினரின் கலகம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெரும்பாலானோர் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களாவர். சதிமுயற்சியில் ஈடுபட்டதாக 23 சிவிலியன்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கலகம் தொடர்பில் இராணுவ நீதிமன்றம் வீரர்களுக்கு சிறை தண்டனை விதித்த நிலையில், 823 இராணுவ வீரர்கள் மீது சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினை காரணமாக இடம்பெற்ற 30 மணி நேர கலகத்தில் 74 பேர் கொல்லப்பட்டனர். இதில் 57 பேர் இராணுவ அதிகாரிகளாவர். பங்களாதேஷ் தலைநகரில் உள்ள துப்பாக்கிப் படைத் தலைமையகத்தில் இந்த கலகம் ஆரம்பமானது. இதன் போது சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் சாக்கடை குழியில் போடப்பட்டிருந்தது. பின்னர் இந்த கலகம் நாட்டின் பல இராணுவ தளங்களுக்கும் பரவியது. இந்த கலகம் தொடர்பில் சுமார் 6000 வீரர்களுக்கு இராணுவ நீதிமன்றம் சிறைத் தண்டனை அளித்துள்ளது.

இந்நிலையில், டாக்கா சிவில் நீதிமன்றத்தில் கொலை, துன்புறுத்தல், சதி முயற்சி மற்றும் மேலும் பல குற்றச்சாட்டுகளில் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் ஆஜர்படுத்தப்பட் டனர்.

No comments

Powered by Blogger.