100 வீத ஆட்சி மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த முடியாது - கரு ஜயசூரிய
அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களில் அரசாங்கத்தை தோற்கடிக்கும் நோக்கம் கொண்ட கூட்டணியை உருவாக்குவதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை அடைய ஏனைய எதிரணி அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
05-11-2013 செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சிக்குள் காணப்பட்ட வேறுபாடுகளை களைந்து கட்சியினர் அனைவரும் ஒன்றாக வேலைசெய்ய கூடிய அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி ஐக்கியமான கட்சியாக உள்ளது. கடந்த காலத்தை மறந்து அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியை தோற்கடிக்க வேண்டும். 100 வீத ஆட்சி மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்த முடியாது. இந்த தருணத்தில் கட்சியில் செய்யப்பட்டுள்ள பாரிய மாற்றங்களை ஏற்க வேண்டும் என்றார்.
நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கரு ஜயசூரிய தலைமையிலான தலைமைத்துவச் சபைக்கு நேற்று அங்கீகாரம் வழங்கியது.
Post a Comment