Header Ads



உலகின் பிரபல அறிவுஜீவிகளில் முதல் 10 நபர்களில் யூசுப் அல் கர்ழாவி

உலகின் பிரபல அறிவுஜீவிகளில் முதல் 10 நபர்களில் சூஃபி சிந்தனையாளர் ஃபத்ஹுல்லாஹ் குலான், கத்தரில் வசிக்கும் எகிப்திய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி, மார்க்சிஸ்ட் சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி, நாஸ்திக விஞ்ஞானி ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அமெரிக்காவில் பிரபல இதழான ஃபாரின் பாலிஸி (Foreign Policy) நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. மாதமிருமுறை வெளியாகும் ஃபாரின் பாலிஸி பத்திரிகையின் 5 லட்சம் வாசகர்கள் பங்கேற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் துருக்கியின் பிரபல அறிஞரும், சிந்தனையாளருமான ஃபத்ஹுல்லாஹ் குலான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நோம் சோம்ஸ்கி, ரிச்சர்ட் டாக்கின்ஸ் உள்ளிட்ட உலகின் பிரபல அறிவுஜீவிகள் குலானுக்குப் பின்னரே உள்ளனர். ஃபாரின் பாலிஸி 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் எக்காலத்திலும் சிறந்த அறிவுஜீவிகள் 100 பேரின் பட்டியலிலும் குலான் முதலிடம் பிடித்தார்.

உலகில் அதிக அளவு செல்வாக்குப் பெற்ற நபர்களை உள்படுத்தி டைம் (Time) இதழ் வெளியிட்ட பட்டியலிலும் குலான் இடம் பிடித்திருந்தார். 2006-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அறிஞர் வங்காளதேசத்தின் முஹம்மது யூனுஸ், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ழாவி ஆகியோர் பட்டியலில் 2, 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

2006-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான விருதைப் பெற்ற துருக்கி நாவலாசிரியர் ஓர்ஹான் பாமுக், பாகிஸ்தான் சட்ட நிபுணர் ஐஸாஸ் அஹ்ஸன், எகிப்தில் பிரபல சொற்பொழிவாளர் அம்ர் காலித், பிரபல ஐரோப்பிய அறிவுஜீவியும், இறையியல் தத்துவ அறிஞருமான தாரிக் ரமதான், ஈரானிய அறிவுஜீவியும், கல்வியாளருமான அப்துல் கரீம் சுரூஹ் ஆகியோர் முறையே 4,5,6,8,9 இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஈரானில் பிரபல மனித உரிமை ஆர்வலரும், சட்ட நிபுணருமான ஷெரின் இபாதி முதல் 10 அறிவுஜீவிகளின் பட்டியலில் இடம் பிடித்த ஒரே பெண்மணி ஆவார். நோம் சோம்ஸ்கி 11-வது இடத்தில் உள்ளார். “தி க்ளாஷஸ் ஆஃப் சிவிலைசேஷன்” (The Clashes of Civilization) என்ற பிரபல நூலின் ஆசிரியர் மறைந்த சாமுவல் ஹண்டிங்டன் (Samuel Huntington) 1970 ஆம் ஆண்டு ஃபாரின் பாலிஸி என்ற பத்திரிகையை நிறுவினார். thoot

No comments

Powered by Blogger.