Header Ads



www.jaffnamuslim.com இணையத்திற்கு வயது 4

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இன்று 31-10-2013 அன்று வயது 4 ஆகும். (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

இந்தவேளையில் எமது இணையத்தின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாகிவிருந்த வாசக உறவுகளுக்கு எமது நன்றிகளை தெரிவிக்கிறோம். இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையம் தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் வாசகர்கள் வழங்கும் ஆதரவுதான் நாம் இணையத்தை கைவிட்டுச் செல்லாமல் நிற்பதற்கான காரணம். இன்ஷா அல்லாஹ் எமது இணையம் மீதான தடை இலங்கையில் விரைவில் நீக்கப்படும் என்ற நம்பிக்கை எம்மிடமுள்ளது.

எந்தவித சக்திகளுக்கும் அச்சமின்றி, நேர்மையுடன் செயற்பட்ட ஜப்னா முஸ்லிம் இணையமானது தொடர்ந்தும் இறை உதவியுடனனும், வாசகர்களின் ஒத்துழைப்புடனும் நேர்மையாக பயணிக்க உறுதிகொண்டுள்ளது.

அத்துடன் ஜப்னா முஸ்லிம் இணையமானது இவ்வேளையில் தனது பிராந்திய நிருபர்களுக்கும் நன்றி சொல்கிறது. எமது இணையத்தின் அசுர வளர்ச்சியில் பிராந்திய நிருபர்களின் பங்களிப்பு மிகப்பிரதானமானது. மேலும் எமது இணையத்தை வழிநடாத்தும் மூத்த ஊடகவியலாளர்கள், அடிக்கடி ஆக்கபூர்வ ஆலோசனைகளை முன்வைக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், மற்றும் எமது இணைய நலனின் ஆர்வம் கொண்டுள்ள அத்தனை உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்..!

Email - jaffnamuslim1990"yahoo.com

Skype ID - jaffnamuslim1990


9 comments:

  1. மதத்திற்கும் மனிதத்திற்கும் தாங்கள் ஆற்றுகின்ற மகத்தான சேவை இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். பக்கச் சார்பின்றி, நடுநிலைமையுடன் செய்திகளை வழங்கும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடைகளும் அச்சுறுத்தல்களும் புதிய விடயங்கள் அல்லவே...!

    எல்லாவற்றையும் எதிர்த்து நிற்கும் நெஞ்சுரம் தங்களிடம் இருக்கிறது. வாசகர்கள் அதற்கான பலத்தையும் ஒத்துழைப்பையும் தங்களுக்கு இடையறாது வழங்கச் சித்தமாயிருக்கிறார்கள்.

    இன்னும் பல ஆண்டுகள் தங்கள் அரும்பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு அருள் பாலிப்பானாக; ஆமீன்!

    ReplyDelete
  2. NICE to hear the message,

    At this point onward I would like to advice JAFFNA.com to appoint a team to take of the quality of your articles,language and responsible issue, which is a must and that will enhance your reliability among your fans.

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்
    முஸ்லிம்களுக்கு உள்ள தனித்துவமான ஊடகம் என்றால் அது jaffana முஸ்லிம் தான் இதற்க்கு யாரிடமும் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது உங்களின் சேவை இந்த நான்கு வருடத்தில் நின்றுவிடாமல் இன்னும் நாநூறு வருடங்கள் தொடரவேண்டும் என்று மாலைதீவில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் வாழ்த்துகின்றோம் உங்களின் வளர்ச்சியில் எப்போதும் உறுதுணையாக இருப்போம்
    மாலைதீவில் இருந்து முஹமத் ஜதீர்

    ReplyDelete
  4. My best wishes, I am really love with Jaffnamuslim.

    ReplyDelete
  5. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ஜப்னா முஸ்லிமை இலங்கை அரசு தடை செய்துள்ளது என்றால், அது ஜப்னா முஸ்லிம் வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தின் வலுவைக் காட்டுகின்றது.

    ஜப்னா முஸ்லிம் தொடர்ந்தும் முன்னணி ஊடகமாக செயல்பட வேண்டும் என்றால், இந்த இணைய டொமைன் இல் தொடர்ந்து செயல்படும் அதே வேளை, இன்னொரு புதிய டொமைனில் இலங்கை மக்களுக்கு தடையின்றி செய்திகளை வழங்க முன்வர வேண்டும். இதனை செய்யத்தவறும் பட்சத்தில், ஜப்னா முஸ்லிம் இலங்கை வாசகர்களை விட்டும் தூரமாகி விடலாம் என்று அஞ்சுகின்றேன். நிர்வாகம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

    ReplyDelete
  6. My best wishes, I am very glad with Jaffnamuslim tamil news.

    ReplyDelete
  7. மாஷா அல்லாஹ்... இன்னும் இன்னும் மென்மேலும் நல்ல பல சேவைகள் செய்ய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
    கபூர் M. பழீல். (ஊடகவியலாளன்)

    ReplyDelete
  8. walththukkal allah oruwanukku mattum payappittal weru yarukkum payappada wendiya awasiyam illai .yar eththanai thadai seithalum allah nadinal yaralum niruththa mudiyathu .

    ReplyDelete
  9. வாழ்த்துப்பா
    நாலுவருடங்கள் நம்மவர் சேதிதனை,
    நலமுடன் தாங்கிவந்த, jafna முஸ்லிமே,
    நாங்களெல்லாம் – உன்னை வாழ்த்துகிறோம்,
    நலம் பெற்று வாழ்த்திடவே.

    விலாசம் அற்று முஸ்லிம்கள், அகதிகளாய்,
    வீதிகளில் , அநாதரவாய் அலைந்தபோது.
    வீராப்பு கொண்டாயோ - நீ பயமின்றி
    வீரனைப்போல் செய்திகளை- தான்கிநின்றாய்.


    ஊர்கூடி , உனைவாழ்த்தி , உயரசெல்வதர்க்கு
    உற்ற தருணம் இதுவென்று,
    உணர்ததனால் – jafana முஸ்லிமே, நாம்கூடி.
    உனைப்போற்றி வாழ்த்துகிறோம்.

    எதிகால எதிபார்ப்பை, ஏக்கமின்றி- தந்துதவ
    ஏணி நாம்நின்று, உனை ஏற்றிடுவோம்
    ஏகனாய் தனிநின்று – நீ
    ஏற்றமுடன் நலம் பெறவே.

    ReplyDelete

Powered by Blogger.