Header Ads



ஊழல் மோசடி காரணமாக கைதாகவிருந்தவிருந்த UNP உறுப்பினர்களே அரசுடன் இணைந்தனர்

ஊழல் மோசடிகள் காரணமாக கைது செய்யப்படவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

மகரகம பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் இராணுவத்தினரிடம் தோல்வியடையாது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தால் அவரது ஆட்சியின் கீழ் ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்கள் அமைச்சு பதவிகளை பெற்றிருப்பார்கள். காரணம் அமைச்சு பதவிகளுக்காக எந்த காட்டிக்கொடுப்பையும் செய்ய அவர்கள் தயாராக உள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கரங்களை பலப்படுத்த போவதாக கூறி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பலருக்கு எதிராக கோப் அறிக்கையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இப்படியான மோசடியாளர்களை இணைத்துக் கொண்ட அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் நடப்பது ஆச்சரியமான விடயமல்ல.

அதிவேக பாதையில் ஒரு கிலோ மீற்றர் தூரத்தை நிர்மாணிக்க 60 மில்லியன் ரூபாவே செலவாகும். எனினும் அரசாங்கம் ஒரு கிலோ மீற்றர் தூர பாதை நிர்மாணிக்க 229 மில்லியனை செலவு செய்துள்ளது. இவ்வாறு மேலதிகமாக செலவிடப்பட்ட பணம் யாரோ ஒரு அரசியல்வாதியின் சட்டைப் பைக்குள் சென்றிருக்கும் என்றார்.

No comments

Powered by Blogger.